ஆபாசமாக வெளியான மார்பிங் வீடியோ..எல்லாரும் அசிங்கமா பாத்தாங்க.. கேப்ரியல்லா சார்ல்டன் வேதனை!
சென்னை: நடிகை கேப்ரில்லா சார்ல்டன், விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமானார். இதைத்தொடர்ந்து, தனுஷ் நடித்த த்ரி படத்தில், ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல், 'அப்பா' படத்திலும் குட்டி பெண்ணாக நடித்திருந்தார். அதன் பின் கேப்ரில்லா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் பணப் பெட்டியுடன் வெளியேறினார்.
இதையடுத்து பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகத்தில் காவியா என்கிற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். தற்போது, இவர் சன்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், மருமகள் சீரியலில் நடித்து வருகிறார். நல்ல குண்டு குண்டுனு இருந்த கேப்ரில்லா தற்போது உடல் எடையை குறைத்து சும்மா சிக்குனு இருக்கிறார். அதன் ரகசியத்தை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நடிகை கேப்ரில்லா சார்ல்டன்: அதில், எல்லோரும் ஜிம்முக்கு வெயிட் குறைக்கத்தான் போவாங்க, ஆனால், நான் வெயிட்டை ஏத்த ஜிம்முக்கு போனேன், ஒல்லியாக இருக்கும்போது வெயிட் போடுவதற்காக ஜிம்முக்குப் போனேன். குண்டாக வேண்டும் என்று ஒரு நாளைக்குப் பத்து இட்லி சாப்பிட்டு இருக்கிறேன். அது ஓவர் வெயிட்டாகிவிட்டதால், இப்போது உடலை குறைத்து இருக்கிறேன். நான் எந்த உடை அணிந்தாலும், அதைப்பார்த்து மற்றவர்கள் கமெண்ட் அடிக்கிறார்கள். அனைவரின் பார்வையும் ஆபாசமாக மாறிவிட்டது. இதனால், நான் எந்த ஒரு கமெண்டையும் படிப்பதே இல்லை.

மார்பிங் போட்டோ: நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது என் போட்டோவை யாரோ மார்பிங் செய்து இணையத்தில் போட்டு விட்டார்கள். அது உண்மை இல்லை என்று தெரிந்தும் என் அம்மா என்னை செமயா அடிச்சாங்க, மூன்று நாளா தூங்காமல் அழுதுக்கிட்டே இருந்தேன். என்னைப் பார்ப்பவர்களின் அனைவரின் பார்வையும் தப்பாக இருந்தது, இதனால், நான் ஸ்கூலுக்கு கூட போகாமல் இருந்தேன். அதன் பிறகு தான் அம்மா, அந்த மார்பிங் செய்த புகைப்படத்தை எடுத்துக்கொண்டு, ஸ்கூலுக்கு போய் பிரின்ஸிபலிடம் விஷயத்தை சொன்னாங்க.
என் கூட படித்தவர்கள் கூட, அது உண்மை தான் என்று நம்பினார்கள். ஆனால், உண்மையான நண்பர்கள் அது உண்மை இல்லை என்று என் மீது நம்பிக்கை வைத்தார்கள். அதனால், அதன்பின் இந்த விவகாரத்தை எப்படி டீல் செய்யணும்னு தைரியம் வந்துவிட்டது என்று நடிகை கேப்ரியல்லா சார்ல்டன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











