twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கபாலி 'ஸ்டிக்கர்களுடன்' ஓசூரைக் கலக்கும் மாருதி ஸ்விப்ட் கார்கள்!

    By Manjula
    |

    ஓசூர்: கபாலி எடிசன் மாருதி ஸ்விப்ட் கார்களை ஓசூரைச் சேர்ந்த அம்மன் கார்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் 'கபாலி' திரைப்படம் உலகம் முழுவதும் வருகின்ற 22ம் தேதி வெளியாகிறது. இதனையொட்டி பல்வேறு நிறுவனங்களும் கபாலி விளம்பரத்தில் குதித்துள்ளன.

    ஏர் ஏசியா, கேட்பரி, ஏர்டெல், முத்தூட் ஆகிய நிறுவனங்கள் 'கபாலி'யின் விளம்பரத் தூதர்களாக மாறியுள்ளன.

    4 நாட்கள்

    4 நாட்கள்

    ரஜினி-ரஞ்சித் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'கபாலி' வெளியாக இன்னும் 4 தினங்களே உள்ளன. இதனால் எங்கெங்கு காணினும் நெருப்புடா, மகிழ்ச்சி என கபாலியின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது.

    மலேசியா

    மலேசியா

    ஏற்கனவே ரஜினியின் மலேசியா ரசிகர்கள் லம்போர்கினி கல்லார்டோ, ஆடி ஆர்8 மற்றும் டொயோட்டா ஹைலக்ஸ் என விலையுயர்ந்த கார்களில் ரஜினி ஸ்டிக்கர்களை ஒட்டி தங்களது 'கபாலி' ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

    அம்மன் கார்ஸ்

    அம்மன் கார்ஸ்

    அந்த வரிசையில் ஓசூரைச் சேர்ந்த அம்மன் கார்ஸ் நிறுவனம் முழுக்க கபாலி ஸ்டிக்கர், பஞ்ச் வசனங்களுடன் மாருதி ஸ்விப்ட் 'கபாலி' எடிசன் ஒன்றை வெளியிட்டுள்ளது. காரின் டீசல் நிரப்பும் இடத்தில் " நெருப்புடா " காரின் மேற்கூறையில் முழுநீள ரஜினி படம் , காரின் பின்புறத்தில் மகிழ்ச்சி ,வந்துட்டனு சொல்லு திரும்பி வந்துட்டனு சொல்லு, நெருப்புடா , நெருங்குடா என வசனங்களை தெறிக்க விட்டுள்ளனர்.

    சொந்தமாக

    சொந்தமாக

    தங்கள் சொந்த ஆர்வத்திலேயே இந்தக் காரை வடிவமைத்து வெளியிட்டதாகவும், இதற்கும் மாருதி நிறுவனத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் அம்மன் கார்ஸ் முகவர் தெரிவித்துள்ளார்.

    படக்குழு

    படக்குழு

    இதற்காக படக்குழு மற்றும் மாருதி நிறுவனம் என யாரையும் தொடர்பு கொள்ளாமல் தங்களது சொந்த செலவிலேயே இந்தக் காரை வடிவமைத்துள்ளனர். முழுக்கவே கபாலி மயமாக உருவாகியிருக்கும் இந்த கார் வழக்கமான செயல்திறன்களுடன் இயங்கும். இதனால் காரில் எந்த மாற்றமும் ஏற்படாது என அம்மன் கார்ஸ் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

    ரஜினி ரசிகர்கள்

    ரஜினி ரசிகர்கள்

    தமிழ்நாடு முழுவதும் ரஜினி ரசிகர்கள் அதிகமிருப்பதால் இந்தக் காரின் விற்பனை அதிகரிக்கும் என்பது இவர்களின் எண்ணமாக உள்ளது. மேலும் கார்களை வாங்கி விற்போரும் இந்த காரை வாங்கிட ஆர்வம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Hosur Amman Cars (Maruti Swift Dealer) Launched Maruti Swift Kabali Edition. Kabali Hit on the Screens on July 22.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X