தானோஸை விட பெரிய வில்லன் காங்கையே கைது செஞ்சிட்டாங்களா.. காதலியை தாக்கிய வழக்கில் சிக்கினார்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: அவெஞ்சர்ஸ் படங்களில் பெரிய வில்லனாக தானோஸ் இருந்து வந்த நிலையில், எண்ட்கேம் வைத்து அவருக்கும் அயன்மேனுக்கும் எண்ட் கார்டு போட்டு விட்டனர்.
அந்த படத்திற்கு பிறகு மார்வெல் மல்டிவெர்ஸ் கான்செப்டில் களமிறங்கி பிரம்மாண்ட படங்களை தயாரித்து வருகிறது.
அதில், தானோஸை விட மிகப்பெரிய வில்லனாக காட்டப்படும் காங் கதாபாத்திரத்தில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானதன் மேஜர்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்
க்ரீட் 3 படத்தில் நடித்து உலகளவில் பிரபலமானவர் ஜானதன் மேஜர்ஸ். லோகி வெப்சீரிஸில் காலத்தையே கன்ட்ரோல் செய்யும் காங்காக நடித்து மிரட்டினார். சமீபத்தில் மார்வெல் தயாரிப்பில் பிரம்மாண்டமாக வெளியான ஆன்ட்மேன் அண்ட் தி வாஸ்ப் குவாண்டமேனியா படத்திலும் வில்லனாக நடித்து மெர்சல் காட்டியிருப்பார் ஜானதன் மேஜர்ஸ். மேலும், அடுத்தடுத்து வரவுள்ள மல்டிவெர்ஸ் படங்களிலும் இவர் காங்காக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஜானதன் மேஜர்ஸ் கைது
2017ல் வெளியான ஹாஸ்டைல்ஸ் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானவர் ஜானதன் மேஜர்ஸ். 33 வயதாகும் நடிகர் ஜானதன் மேஜர்ஸ் ஹாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகராக உள்ள நிலையில், திடீரென சனிக்கிழமை இரவு மான்ஹாட்டனில் நியூயார்க் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காதலிக்கு கழுத்து உடைந்தது
ஜானதன் மேஜர்ஸ் தனது கேர்ள் ஃபிரெண்ட் உடன் வசித்து வந்த நிலையில், அந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியாகவும் அவர் மீது வன்முறையிலும் ஈடுபட்டதாக 911க்கு புகார் பறந்த நிலையில், ஜானதன் மேஜர்ஸை நியூயார்க் போலீஸார் கைது செய்தனர். ஜானதன் மேஜர்ஸ் தனது கேர்ள் ஃபிரெண்டின் கழுத்தை அடித்து உடைத்து விட்டதாகவும் புகார்கள் கிளம்பி உள்ளன.

நான் தப்பே பண்ணல
ஆனால், ஜானதன் மேஜர்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நான் எந்த பெண்ணையும் சித்ரவதை செய்யவில்லை. இது முற்றிலும் என்னை மாட்டிவிட செய்த திட்டமிட்ட சதி என கூறியுள்ள நிலையில், அவருக்கு நியூயார்க் நீதிமன்றம் ஜாமின் வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மார்வெலில் நடிக்கக் கூடாது
ஜானி டெப்புக்கும் அவரது இரண்டாவது மனைவி ஆம்பர் ஹெர்டுக்கும் இடையே இதே போன்ற குடும்ப வன்முறை பிரச்சனை எழுந்த நிலையில், பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தில் நடிக்கும் வாய்ப்பே பறிக்கப்பட்டது. ஆனால், கடைசி வரை போராடி தனது பக்கம் உள்ள நியாயத்தை அவர் நிறுவிய நிலையில், ஆம்பருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில், மார்வெல் உடனடியாக காங் கதாபாத்திரத்தில் இருந்து ஜானதன் மேஜர்ஸை நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











