அப்செட்டில் அயன்மேன் ரசிகர்கள்.. பிளாக் விடோ தமிழ் டிரைலர் ரிலீஸ்!

Recommended Video

Black Widow release date in India | ‘பிளாக் விடோ’இந்திய வெளியீடு தேதி அறிவிப்பு

அப்செட்டில் அயன்மேன் ரசிகர்கள்.. பிளாக் விடோ தமிழ் டிரைலர் ரிலீஸ்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோ டீமில் உள்ள முக்கியமான பெண் சூப்பர் ஹீரோ பிளாக் விடோவின் தனிக் கதை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் தேதி வெளியாகிறது.

மார்வெலின் சூப்பர் ஹீரோக்கள் ஒட்டுமொத்தமாக இணைந்து தானோஸை துவம்சம் செய்த அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகி, அவதார் வசூலை மிஞ்சி உலகளவில் வசூலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில், மார்வெல் தயாரிப்பில் உருவாகியுள்ள பிளாக் விடோ டிரைலர் தற்போது வெளியாகி உலகளவில் டிரெண்டாகி வருகிறது.

பிளாக் விடோவாக மாறும் நடாஷா

2010ம் ஆண்டு வெளியான அயன்மேன் படத்தில் ரஷ்ய உளவாளி நடாஷா ரோமனாஃப் ஆக நடித்திருந்த ஸ்கார்லெட் ஜோஹன்சன், ஷீல்ட் ஏஜென்ட் பிளாக் விடோவாக எப்படி மாறுகிறார் என்ற மூலக் கதையை அடிப்படியாகக் கொண்டு பிளாக் விடோ படம் உருவாகியுள்ளது. ஆஸ்திரேலிய இயக்குநர் கேட் ஷார்ட்லேண்ட் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

அயன்மேன் ரசிகர்கள் அப்செட்

இந்த ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் அயன்மேன் இறுதியில் இறந்துவிடுவார். இதற்கு மேல், மார்வெல் படத்தில் அயன்மேனை காண முடியாது என ரசிகர்கள் வருத்தப்பட்டிருந்த நிலையில், அவெஞ்சர்ஸ் எண்ட்கேமுக்கு முந்தைய காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள பிளாக் விடோ படத்தில் அயன்மேன் கதாபாத்திரம் வரும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு தற்போது வெளியாகியுள்ள டிரைலரில் அயன்மேனை காட்டாததால், அவர் இந்த படத்தில் வர மாட்டார் என ரசிகர்கள் அப்செட்டாகி உள்ளனர்.

ஹாலிவுட்டுக்கு முன்பே

ஹாலிவுட் படமான பிளாக் விடோ அமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் மே 1ம் தேதி வெளியாகிறது. ஆனால், இந்தியாவில் ஒரு நாள் முன்பாக ஏப்ரல் 30ம் தேதியே ரிலீசாகிறது. கடந்த ஆண்டு ஏப்ரலில் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் இந்தியாவில் பல நூறு கோடிகளை வசூலித்த நிலையில், பிளாக் விடோ படத்தையும் இந்தியாவில் மார்வெல் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்கிறது.

எத்தனை மொழிகளில்

வழக்கமாக ஆங்கில படங்கள் இந்தியாவில் ரிலீசானால், அதிக மார்க்கெட் உள்ள தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே ரிலீஸ் செய்து வந்த நிலையில், பிளாக் விடோ படம் இந்தியாவில் 6 மொழிகளில் ரிலீசாக உள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் பிளாக் விடோ இந்தியாவில் வெளியாகிறது. தற்போது மற்றும் தமிழ் மொழியில் இந்த டிரைலர் வெளியாகியுள்ளது.

டிரைலர் எப்படி இருக்கு?

2010ம் ஆண்டு அயன்மேன் படத்தில் எப்படி பிளாக் விடோவாக அதிரடி காட்டினாரோ அதே அளவு அதிரடியை 2020ம் ஆண்டிலும் காட்ட ரெடியாகி விட்டார் ஸ்கார்லெட். அவெஞ்சர்ஸ் படங்களில் பார்த்த ஹாக் ஐ மற்றும் நிக் ஃப்யூரி இந்த டிரைலரில் இடம்பிடித்துள்ளனர். கேப்டன் அமெரிக்கா மற்றும் அயன்மேன் படத்தில் சர்ப்ரைஸாக வருவார்களா இல்லையா என்பது இயக்குநருக்குத் தான் வெளிச்சம். ஸ்பெஷல் பவர்ஸ் இல்லாத சாதாரண பெண்ணான நடாஷா எப்படி சூப்பர் ஹீரோ பிளாக் விடோவாக தன்னை மாற்றிக் கொள்கிறார் என்பதை டிரைலரிலேயே பிரம்மாண்டமாக காட்சிப் படுத்தியுள்ளனர்.

More from Filmibeat

Read more about: black widow marvel
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X