இம்பாலில் களைகட்டும் மேரிகோம் திருட்டு டிவிடி விற்பனை...
இம்பால்: மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மேரிகோம் திருட்டு டிவிடி விற்பனை கனஜோராக நடைபெற்று வருகிறது.
மணிப்பூர் மாநிலத்தில் இம்பால் பள்ளத்தாக்கில் இந்தி திரைப்படங்களை வெளியிடுவதற்கு 2000ஆம் ஆண்டு முதல் புரட்சிகர மக்கள் முன்னணி என்ற ஆயுதம் தாங்கிய அமைப்பு தடை விதித்துள்ளது. ஆனால் இம்பால் பள்ளத்தாக்கு தவிர்த்த இதர மலை மாவட்டங்களில் இந்த தடை இல்லை.

இதனால் மணிப்பூரைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோமின் வாழ்க்கையை விவரிக்கும் மேரிகோம் இந்தி திரைப்படம் இம்பால் பள்ளத்தாக்கில் வெளியிடப்படவில்ல.
இதனை பயன்படுத்திக் கொண்டு திருட்டு டிவிடி கும்பல், மேரிகோம் பட டிவிக்களை ரூ30க்கு விற்று கல்லா கட்டிக் கொண்டிருக்கிறது. இம்பாலில் கனஜோராக திருட்டி டிவிடி வியாபாரம் நடைபெறுவது குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டும் அது தடுக்கப்படவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











