twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மரியான் படத்தின் ‘நெஞ்சே எழு’ டீஸர்: ஒரே நாளில் 2.25 லட்சம் ஹிட்

    By Mayura Akilan
    |

    'நெஞ்சே எழு'.... இது மரியான் படத்தில் வரும் ஒரு பாடல். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த இந்த பாடலில் 38 செகண்ட் டீஸர் தற்போது யுடியூப்பில் வெளியாகி ஹிட் அடித்துள்ளது.

    பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் மரியான் படமும் கடல்சார்ந்த மக்களின் பிரச்னையை மையமாக வைத்துதான் உருவாகி வருகிறது.

    பரத் பாலா - A R ரஹ்மான் கூட்டணி ஏற்கனவே வந்தே மாதரம் பாடல் ஆல்பத்தில் இணைந்து பணியாற்றினர். அது மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்போது மரியான் படம் மூலம் இணைந்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளதாம்.

    நெஞ்சே எழு .... பாடலின் 38 செகண்ட் டீஸரை யு டியூப்பில் ஒரே நாளில் 2.5 லட்சம் பேர் கண்டு ரசித்து லைக் கொடுத்திருக்கிறார்களாம்.

    இசையோடு, நெஞ்சே எழு பாடல் ரசிகர்கள் ரசிக்கும் விதமாக படமாக்கப் பட்டுள்ளதாம். இதனாலேயே ரசிகர்களிடையே பாடல் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது என்கின்றனர். நெஞ்சே எழு பாடலை கவிஞர் குட்டி ரேவதி எழுதியுள்ளார்.

    மரியான் படத்தின் இசை பல்வேறு சாதனைகளை படைக்கும் என்கின்றனர் சோனி நிறுவனத்தார்.

    மரியான் படத்தின் 'நெஞ்சே எழு' டீஸர் - வீடியோ

    <center><center><center><iframe width="650" height="417" src="http://www.youtube.com/embed/wPQbV5V8pHQ" frameborder="0" allowfullscreen></iframe></center></center></center>

    English summary
    A song from Mariyaan, Nenje Ezhu, was recently unveiled as a 38-second teaser. This number sung passionately by the composer of the film, AR Rahman himself, has lyrics by Kutti Revathi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X