அடுத்த 20 நாட்கள் ரொம்ப முக்கியம்.. கொரோனாவில் இருந்து தப்பிக்க.. விவேக் சொல்லும் ஆசமான ஐடியா!
சென்னை: கொரோனா வைரஸ் இந்தியாவில் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க காரணம், பிரதமர் மோடி அறிவித்த லாக்டவுனை மக்கள் சரியாக கடைபிடிப்பது தான் என நடிகர் விவேக் பேசியுள்ளார்.
Recommended Video
தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் முகக் கவசம் அணிந்த படி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நகைச்சுவை நடிகர் விவேக், அடுத்த 20 நாட்கள் கொரோனாவில் இருந்து தப்பிப்பது ரொம்ப முக்கியமான விஷயம் என்று கூறியுள்ளார்.

கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 437 பேர் இதுவரை கொரோனாவுக்கு நம்ம நாட்டில் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
கிட்டத்தட்ட 1,749 பேர் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணம் அடைந்துள்ளனர். 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், 25 நாட்கள் வரை ஊரடங்கில் இருந்த நாம், அடுத்து வரும் 20 நாட்களில் வெளியே செல்லாமல் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமான விஷயம் என பேசியுள்ள நடிகர் விவேக், உடலுக்கு மிளகு ரசம், உயிருக்கு முகக் கவசம், இந்த இரண்டு சம் இருந்தால் லைஃப் ஆசமாக இருக்கும் என தனது பாணியில் பஞ்ச் வைத்து பேசியுள்ளார்.
கடந்த 25 நாட்கள் வரை ஊரடங்கில் இருந்த நாம், அடுத்து வரும் 20 நாட்களில் வெளியே செல்லாமல் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமான விஷயம் என பேசியுள்ள நடிகர் விவேக், உடலுக்கு மிளகு ரசம், உயிருக்கு முகக் கவசம், இந்த இரண்டு சம் இருந்தால் லைஃப் ஆசமாக இருக்கும் என தனது பாணியில் பஞ்ச் வைத்து பேசியுள்ளார்.
மேலும், கண்கள் வழியாக கொரோனா அதிகளவில் பரவாது என்றும், வாய் மற்றும் மூக்கு பகுதிகளை முழுமையாக மூடி இருக்கும் படி முகக் கவசங்களை அணிவது கட்டாயம் என்றும், வீட்டை விட்டு வெளியே வரும் பட்சத்தில் முகக் கவசம் தான் உங்களை காக்கும் கருவி என்றும் பேசியுள்ளார்.
லாக் டவுனுக்கு முன்பாக விவேக், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான தாராள பிரபு திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தாலும், தியேட்டரில் நீண்ட நாட்கள் ஓடும் வாய்ப்பை இழந்தது. அமேசான் பிரைமில் வெளியாகி உள்ள அந்த படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.
தனுஷின் உத்தமப்புத்திரன் படத்திற்கு பிறகு முழு படத்தையும் தாங்கி நகர்த்தும் ரோலில் நடிகர் விவேக் ஸ்கோர் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











