த்ரிஷா இன்னும் கொஞ்ச நாளில்.. விஜய்யோடு முடுச்சு போடுகின்றாரா மன்சூர் அலிகான்? எல்லாம் நடக்குமா?

சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான மற்றும் கவனிக்கத்தகுந்த நடிகர்களில் ஒருவராக உள்ளார். குறிப்பிட்ட காலம் வரை வில்லனாக நடித்து வந்த மன்சூர் அலிகான் தற்போது தனக்கு விருப்பப்பட்ட கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றார். அரசியலிலும் ஈடுபட்டு வரும் மன்சூர் அலிகான் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசிய விஷயங்கள் பலரது கவனத்தினை ஈர்த்தது. அதில் நடிகை த்ரிஷா குறித்தும் பேசினார். அது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்து 22 ஆண்டுகள் ஆகின்றது. இந்த 22 ஆண்டுகளில் தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு உள்ளார். சமீபத்தில் கூட இவரது நடிப்பில் வெளியான நேரடி மலையாளப் படமான ஐடெண்ட்டி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. இந்த மாதம் 23ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக கூறப்படும் அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் இவர் நடித்துள்ளார்.

masoor ali khan trisha vijay

இது மட்டும் இல்லாமல், சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 45 படத்திலும் நடித்து வருகின்றார். கமல் ஹாசானின் 234வது படத்திலும் நடித்துள்ளார். இந்த அளவுக்கு பிசியான நடிகையாக தென்னிந்திய சினிமாவில் த்ரிஷா உள்ளார். அதனால்தான் அவரை தென்னிந்திய இளவரசி அதாவது, குயின் ஆஃப் சவுத் இந்தியா என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். த்ரிஷா எந்த அளவுக்கு பிசியான நடிகையோ அந்த அளவுக்கு அவர் மீது சர்ச்சைகள் எழுந்துள்ளது.

மன்சூர் அலிகான்: குறிப்பாக நடிகை த்ரிஷா மற்றும் விஜய் குறித்து பல ஆண்டுகளாகவே திரையுலகில் கிசுகிசுக்கள் இருந்து வருகின்றது. இப்படியான நிலையில் கடந்த ஆண்டு, நடிகை த்ரிஷாவுடன் நடிக்கும்போது அவருக்கும் எனக்கும் ஒரு ரேப் சீன் வைத்திருந்தால் நன்றாக இருக்கும் என மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. அவரது பேச்சுக்கு த்ரிஷா தொடங்கி, லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களும் திரைப்பிரபலங்களும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் மன்சூர் அலிகானோ, தான் அவ்வாறு கூறவில்லை, நான் பேசியதை திரித்து செய்தியாக்கிவிட்டார்கள் எனத் தெரிவித்தார்.

masoor ali khan trisha vijay

அமைச்சர் த்ரிஷா?: இந்நிலையில் இன்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அதில், நடிகை த்ரிஷா குறித்து பேசும்போது, நான் நடிகை த்ரிஷா குறித்து முன்பு தவறாக எதுவுமே குறிப்பிடவில்லை. நான் பேசியதை திரித்து, வெட்டி, ஒட்டி செய்தியாக்கிவிட்டார்கள். எப்படியோ நடிகை த்ரிஷா விரைவில் அமைச்சராகிவிடுவார் என தெரிவித்தார். இது பலரது கவனத்தினை ஈர்த்தது மட்டும் இல்லாமல் சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.

விஜய் கட்சி: குறிப்பாக, நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷா அமைச்சராகிவிடுவார் என எதன் அடிப்படையில் கூறுகின்றார்? விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் த்ரிஷா இணைந்து தேர்தலில் போட்டியிட்டு வென்று, அதன் பின்னர் அமைச்சர் ஆகிவிடுவார் என்பதைத்தான் அவ்வாறு கூறினாரா என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. ஏற்கனவே விஜய்யின் கட்சியில் பல்வேறு நடிகர்கள் இணைந்துள்ளனர். நடிகை த்ரிஷா இணைவாரா இல்லையா என்பது குறித்து பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X