ஜகமே தந்திரம் படத்தின் அடுத்த அப்டேட்... ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஸ்வீட் சர்ப்ரைஸ்
சென்னை : தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜகமே தந்திரம்.
Recommended Video
மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள இந்த திரைப்படம் கொரோனா மற்றும் லாக்டவுன் உள்ளிட்ட காரணங்களால் ரிலீசாகாமல் உள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த படம் குறித்த ஒரு முக்கிய அறிவிப்பை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார்.

கேங்ஸ்டர் படம்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள இந்த திரைப்படம் கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ளது. இந்த சம்மரிலேயே படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது கொரோனா மற்றும் அதையொட்டிய லாக்டவுன் உள்ளிட்ட காரணங்களால் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசை
ஒய்நாட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா லஷ்மி ஹீரோயினாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் படத்தில் ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசனி, ஜோஜூ ஜார்ஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கார்த்திக் சுப்புராஜ் வெளியீடு
இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதம் 18ம் தேதி ரிலீசாக உள்ளதாக சமீபத்தில் நெட்ப்ளிக்ஸ் அறிவித்துள்ளது. படம் சென்சார் செய்யப்பட்டு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் புதிய போஸ்டரை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

22ம் தேதி வெளியீடு
அந்த போஸ்டரில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் அழகான பின்புலத்தில் நடந்து வருவது போல உள்ளது. மேலும் வரும் 22ம் தேதி இந்த படத்தின் நேத்து என துவங்கும் பாடல் வெளியாக உள்ளதாகவும் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். இந்த கடினமான நேரத்தில் கொஞ்சம் லவ்வை பரப்புவோம் என்றும் தெரிவித்துள்ளார். 22ம் தேதி ரசிகர்கள் அனைவருக்கும் சிறப்பான ட்ரீட் உள்ளது என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











