எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் டைரக்டர் ஷங்கர் -ராம்சரண் கூட்டணி... படத்தில் இணையும் புதிய ஆர்ட்டிஸ்ட்

ஐதராபாத் : நடிகர் ராம்சரணின் 15வது படத்தை இயக்கவுள்ளார் டைரக்டர் ஷங்கர்.

இந்தியன் 2 பிரச்சினையிலிருந்து தற்போது நீங்கியுள்ள அவர் இந்த படத்தின் சூட்டிங்கை வரும் ஆகஸ்ட் மாதத்தில் துவங்கவுள்ளார்.

இந்நிலையில் ஆர்சி15 படத்தில் சிறப்பான ஆர்ட்டிஸ்ட் ஒருவரும் தற்போது இணைந்துள்ளார்.

லைக்கா வழக்கு

லைக்கா வழக்கு

இயக்குநர் ஷங்கர், கமல் நடிப்பில் இந்தியன் 2 படத்தை கடந்த ஆண்டில் இயக்கி வந்தார். சில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், அவர் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்தபின்பே அடுத்த படத்தை இயக்க வேண்டும் என்று லைக்கா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ஆர்சி 15 படம்

ஆர்சி 15 படம்

ஆனால் ஷங்கருக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்து உத்தரவிட்டது. இதையடுத்து தற்போது தெலுங்கில் ராம்சரணை வைத்து படம் இயக்கவுள்ளார் ஷங்கர். தற்காலிகமாக ஆர்சி 15 என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் சூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதத்தில் துவங்கவுள்ளது. இந்த படத்தில் முதல்முறையாக ராம்சரணுடன் இணைகிறார் ஷங்கர்.

படத்தில் இணைந்த சாய்மாதவ் புரா

படத்தில் இணைந்த சாய்மாதவ் புரா

தில் ராஜூ தயாரிக்கவுள்ள இந்த படத்தின் முதல்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. படத்தின் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டவர்களின் தேர்வில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே படத்தின் புதிய இணைப்பாக சேர்ந்துள்ளார் ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் பணிபுரிந்துள்ள சாய்மாதவ் புரா.

ட்விட்டரில் அறிவிப்பு

ட்விட்டரில் அறிவிப்பு

இந்த படத்திற்கான வசனங்களை தான் எழுதவுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் படத்தின் மேலும் ஷங்கர், தில் ராஜூ மற்றும் ராம்சரணுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். தெலுங்கில் பிரபல வசனகர்த்தாவான இவர் ஆர்சி15 படத்தில் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X