11 மணி.. ட்விஸ்ட் வைத்த சன் பிக்சர்ஸ்..தலைவர் 169 அறிவிப்பா? ஷங்கர் ரஜினி மீண்டும் இணைகின்றனரா?

சென்னை : புதிய அறிவிப்பு நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம், திருச்சிற்றம்பலம், சந்திரமுகி 2, பொன்ராம் இயக்கத்தில் உருவாக உள்ள விஜய்சேதுபதியின் 46 திரைப்படத்தையும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 169 திரைப்படத்தையும் தயாரித்து வருகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விஸ்ட் வைத்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளதால், ரசிகர்கள் ஏகத்திற்கும் குழம்பி உள்ளனர்.

நெல்சன்

நெல்சன்

கோலமாவு கோகிலா படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார் நெல்சன். முதல் படத்திலேயே மகத்தான வெற்றியை கொடுத்தார். இதையடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் படத்தை எடுத்தார். கடந்தாண்டு ரிலீசான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

கடுமையான விமர்சனம்

கடுமையான விமர்சனம்

டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைத்த நெல்சன், அவரை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்தாலும், விமர்சன ரீதியாக கடும் தோல்வியை சந்தித்தது. பீஸ்ட் படத்தை ரசிகர்கள் இணையத்தில் வைத்து சகட்டு மேனிக்கு கிண்டல் அடித்தனர். மோசமான திரைக்கதையே இப்படத்தின் தோல்விக்கு காரணம் என கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

விரைவில் படப்பிடிப்பு

விரைவில் படப்பிடிப்பு

பீஸ்ட் திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முன்பே ரஜினியின் தலைவர் 169 படத்தை இயக்க ஒப்பந்தமானார் நெல்சன். பீஸ்ட் படத்தின் தோல்விக்கு திரைக்கதை தான் காரணம் என்பதால், திரைக்கதை அமைக்க நடிகர் ரஜினிகாந்த் தனது ஆஸ்தான இயக்குநரான கே.எஸ்.ரவிக்குமாரை அணுகியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஜூலை மாதம் இறுதியில் தலைவர் 169 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெறவுள்ளது.

ட்விஸ்ட் வைத்த சன் பிக்சர்ஸ்

ட்விஸ்ட் வைத்த சன் பிக்சர்ஸ்

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டார் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு நாளை காலை 11 மணிக்கு புதிய அப்டேட் ஒன்று வெளியாகும் என குறிப்பிட்டுள்ளது. ட்விஸ்ட் வைத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது எந்த படத்தின் அப்டேட் என்று தெரியாமல் குழம்பி வருகின்றனர்.

தலைவர் 169 அறிவிப்பா ?

தலைவர் 169 அறிவிப்பா ?

சன் பிக்சர்ஸ் விரைவில் வெளியாகவுள்ள தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தை தயாரித்துள்ளது. ஒருவேளை அந்த படத்தின் அப்டேட்டாக இருக்குமோ என்றும் தனுஷ் ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். ஆனால் ரஜினி ரசிகர்களோ ஸ்டார் என்றால் என்றுமே ரஜினி தான் இதனால், தலைவர் 169 திரைப்படத்தின் அப்டேட்டாத்தான் இருக்கும் என்று மாறி மாறி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X