ரவி தேஜா நடித்த டிஸ்கோ ராஜா டீசர் வெளியீடு.. படத்தில் ஆக்ஷன் அதிகமாம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஹைதராபாத்: ரவி தேஜா மற்றும் பாபி சிம்ஹா, பாயால் ராஜ்புத், நப்பா நட்டேஷ், தான்யா ஹேப் உட்பட பலர் நடித்த திரைப்படம் டிஸ்கோ ராஜா. படத்தை ஆனந்த் இயக்கியுள்ளார். தமன் எஸ் எஸ் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
ரவி தேஜா தெலுங்கு சினிமாவின் ஒரு முன்னணி நடிகர்களுள் இவரும் ஒருவர். பல படங்களில் பாடல்களும் பாடியுள்ளார். பல படங்களில் கேஸ்ட் அப்பியரன்ஸிலும் வந்து சென்றுள்ளார். இவர் நடித்த நீ கோசம், இடியட், பாத்ரா, சம்போ சிவ சம்போ ஆகிய படங்கள் அங்கு பெரும் வெற்றி பெற்றது.

டிஸ்கோ ராஜா படத்தின் இரண்டாவது டீசர் நேற்று மாலை வெளியானது. பாபி சிம்ஹா இப்படத்தில் ரவி தேஜாவிற்கு வில்லனாக நடித்துள்ளார். இப்படம் வரும் 24 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வெளியான டீசரில் படத்தை பற்றி ரசிகர்களுக்கு கொஞ்சம் புரியும்படி இருந்தது. இது ஒரு சைன்ஸ் பிக்ஷன் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் மெடிக்கல் கிரைம் சம்மந்தப்பட்ட கதை அங்கு நடக்கும் சில சம்பவங்கள் அதனை ஹீரோ எப்படி எதிர் கொள்கிறார் என்பதை சுவாரசியம் மாறாமல் நமக்கு வழங்க உள்ளார் இயக்குனர் ஆனந்த்.
டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று உள்ளது. படமும் மிகப் பெரிய வெற்றி பெரும் என்று டோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. ரவி தேஜாவிற்கும் மற்றும் அவரது ரசிகர்களுக்கு இது ஒரு பக்கா மாஸ் ஆக்ஷன் படமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. டீசர் வெளியாகி யூடியுபில் டிரென்டிங்கில் உள்ளது.


Click it and Unblock the Notifications











