பாடும் நிலா எஸ்பிபிக்காக நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனை.. திணறிய டிவிட்டர்! #GetWellSoonSPBSIR
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள எஸ்பி பாலசுப்ரமணியம் நலம்பெற வேண்டி தமிழகம் முழுவதும் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்ற நிலையில் டிவிட்டரிலும் #GetWellSoonSPBSIR என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டாகி வருகிறது.
Recommended Video
பிரபல பாடகரான எஸ் பி பாலசுப்ரமணியம் கடந்த 5ஆம் தேதி முதல் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கடந்த சில நாட்களாக மோசமடைந்துள்ளது.
வென்டிலேட்டரில் உள்ள எஸ்பி பாலசுப்ரமணியத்துக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மீண்டு வர வேண்டும் என கடந்த ஒரு வாரமாக பிரபலங்கள் பலரும் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.

எஸ்பிபி பாடல்
இந்நிலையில் இன்று மாலை நடிகர் எஸ்பி பாலசுப்ரமணியம் நலம் பெறவேண்டி தமிழகம் முழுவதும் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரை பிரபலங்கள் மட்டுமின்றி ரசிகப் பெருமக்களும் பங்கேற்றனர். எஸ்பிபியின் பாடலை ஒலிக்க விட்டும் கைகளில் அவரது படத்தை ஏந்தியும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர்.

ஹேஷ்டேக்
இதனை தொடர்ந்து, டிவிட்டரிலும் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களின் பிரார்த்தனையை பகிர்ந்து கொண்டனர். பலரும் #GetWellSoonSPBSIR என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தினர். இதனால் #GetWellSoonSPBSIR என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரென்ட்டானது. இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரென்ட்டிங்கில் உள்ளது.

அதுல்யா ரவி
நடிகை அதுல்யா ரவி பதிவிட்டுள்ள டிவிட்டில்,
நம்முடைய எல்லா பிரார்த்தனைகளின் சக்தியும் நிச்சயமாக அற்புதமான முடிவுகளைப் பெறும்!
அனைத்து கொரோனா நோயாளிகள் மற்றும் நம்முடைய லெஜன்ட் எஸ் பாலசுப்ரமணியம் சார் விரைவில் குணமடைய வேண்டியும் பிரார்த்தனை செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைவோம்! என பதிவிட்டுள்ளார்.

சிவ கார்த்திகேயன்
நடிகர் சிவ கார்த்திகேயன் பதிவிட்டுள்ள டிவிட்டில் இப்படி பாட உங்களால் மட்டும்தானே முடியும்.. சீக்கிரம் எழுந்து வாருங்கள் SPB சார் உங்களுக்காக காத்திருக்கிறோம் என கேளடி கண்மணி படத்தில் எஸ்பி பாலசுப்ரமணியம் மூச்சு விடாமல் பாடும் பாடல் காட்சியை ஷேர் செய்துள்ளார்.

தமன்
இதேபோல் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரும் #GetWellSoonSPBSIR என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டுள்ளார். இதேபோல் இசையமைப்பாளர்கள் டி இமான், தமன் உள்ளிட்ட பலரும் எஸ்பிபி நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்துள்ளனர்.

சமூக வலைதளங்களில்
நடிகர் சதீஷ் பதிவிட்டுள்ள டிவிட்டில், "டியர் எஸ்பிபி சார் பயணத்திலும் நடைப் பயிற்சியிலும் முயற்சியிலும் அயற்சியிலும் வெற்றியிலும் தோல்வியிலும் எங்களை இயக்குவது உங்கள் குரல் தான்... தாய்க்குப் பிறகு அதிகம் கேட்டதும் உங்கள் குரல் தான்.. குரலால் உலகையே வென்ற நீங்கள் கொரோனாவையும் வெல்ல கடவுளைப் பிரார்த்திக்கிறோம்" என பதிவிட்டுள்ளார்.

தாய்க்கு பிறகு நீங்கள்தான்
நடிகர் சதீஷ் பதிவிட்டுள்ள டிவிட்டில், "டியர் எஸ்பிபி சார் பயணத்திலும் நடைப் பயிற்சியிலும் முயற்சியிலும் அயற்சியிலும் வெற்றியிலும் தோல்விலும் எங்களை இயக்குவது உங்கள் குரல் தான்... தாய்க்குப் பிறகு அதிகம் கேட்டதும் உங்கள் குரல் தான்.. குரலால் உலகையே வென்ற நீங்கள் கொரோனாவையும் வெல்ல கடவுளைப் பிரார்த்திக்கிறோம்" என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











