பாடகர் எஸ்பிபி நலம்பெறவேண்டி தமிழகம் முழுவதும் கூட்டுப் பிரார்த்தனை: ரசிகர்கள் பிரபலங்கள் பங்கேற்பு!
சென்னை: பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டி உலகம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் 6.5 மணி வரை கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
Recommended Video
பிரபல பாடகரான எஸ் பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் உடல்நிலையில் கடந்த சில நாட்களாக சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தற்போது ஐசியுவில் உள்ள அவருக்கு அவருக்கு வென்டிலேட்டர் மற்றும் எக்மோ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை வெளியிட்டு வரும் அறிக்கை அவரது ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தி வருகிறது.

கூட்டுப் பிரார்த்தனை
இந்நிலையில் எஸ்பி பாலசுப்ரமணியம் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டி இன்று மாலை கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. இன்று மாலை 6 மணி முதல் 6.5 மணி வரை எஸ்பிபியின் பாடலை ஒலிக்கவிட்டும் 2 நிமிட மவுன பிரார்த்தனை செய்தும் கூட்டுப் பிரார்த்தனை நடத்தப்பட்டது.

வீட்டின் வாசல்களில் நின்று
இந்த கூட்டுப் பிரார்த்தனையில் தமிழ் திரைத்துறையை சேர்ந்தவர்கள், ரசிகர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள எஸ்பிபியின் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
சாலைகளிலும், வீட்டின் வாசல்களிலும் நின்று ரசிகர்கள் மவுன பிரார்த்தனை செய்தனர்.

மருத்துவமனைக்கு வெளியே
சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை எஸ்பிபிக்கான கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்றனர்.
தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் ரசிகர்கள் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சென்னை சூளைமேட்டில் எஸ்பி பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு வெளியிலும் ரசிகர்கள் கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

மெழுகுவர்த்தி ஏந்தி..
கைகளில் எஸ்பிபியின் படத்தை ஏந்தியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர். இதேபோல் இயக்குநர் பாரதிராஜா, நடிகை சரோஜா தேவி, பார்த்திபன், இசையமைப்பாளர் தேவா உள்பட பல திரைப் பிரபலங்களும் எஸ்பிபிக்கான கூட்டுப்பிரார்த்தனையில் பங்கேற்றனர்.


Click it and Unblock the Notifications











