twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்றும் கிளாஸ் அண்டு மாஸ் சிங்கர் ஹரிஹரன் ஸ்பெஷல் ரவுண்டப்!

    |

    சென்னை : இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் இருவருக்குமே மிகவும் பிடித்த பாடகர் என்ற பெருமைக்குரியவர் ஹரிஹரன்

    இந்தியாவின் தலைசிறந்த கஜல் பாடகராக அறியப்படும் ஹரிஹரன் அவர்களின் இசைப்பயணம் அதிகதூரம் கடந்து வந்திருக்கிறது. இந்திய பாரம்பரிய இசையில் வேரூன்றிய இவர், மேற்கத்திய பாரம்பரிய இசையையும் அநாயசமாக கையாள்கிறார்.

    தன்னுடைய கம்பீரக்குரலால் அனைவரையும் கட்டிப்போடும் வித்தைத் தெரிந்த வித்தகன் என்று சொன்னால் அது மிகையாகாது. ஏ.ஆர்.ரகுமான்-ஹரிஹரன் கூட்டணியில் பல அற்புதமான பாடல்கள் உருவாவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். ஜாம்பவன் ஹரிஹரன் ஓர் பார்வை..

     முறைப்படி இசை

    முறைப்படி இசை

    ஹரிஹரனின் பூர்வீகம் கேரளாவாக இருந்தாலும், பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பையில் தான். இவருடைய அப்பா, அம்மா இருவருமே இசை குருக்கள், இவர் தன்னுடைய அம்மாவிடமே முறைப்படி இசை கற்றுக்கொண்டார். இந்துஸ்தான் இசையால் ஈர்க்கப்பட்ட இவர் தன்னுடைய 9வது வயதில் இந்துஸ்தான் இசையை கற்றுக்கொண்டார்.

     கஜல் பாடல் மீது ஆர்வம்

    கஜல் பாடல் மீது ஆர்வம்

    1978ல் தன்னுடைய முதல் ஹிந்தி பாடலை ஹரிஹரன் பதிவு செய்தார். அந்த பாடல் இவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரை வாங்கிக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், உத்தரப்பிரதேச மாநிலததின் சிறந்த பாடகருக்கான விருதையும் பெற்றுத்தந்தது. இருப்பினும் பாடல்கள் பாடுவதை விட கஜல் பாடல்கள் மீது அலாதி பிரியம் கொண்ட ஹரிஹரன் கஜல் பாடல்களை பாடி குவித்தார்.

     தமிழா தமிழா

    தமிழா தமிழா

    அவரது கஜல் பாடல்களை கேட்டு மயங்கி தமிழுங்கு இவரை அறிமுகம் செய்து வைத்ததார் ஏ.ஆர்.ரஹ்மான். 1992ம் ஆண்டு வெளியான ரோஜா படத்தில் வரும் தமிழா தமிழா என்ற பாடலை பாடினார். அப்பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஹரிஹரனை நிலையாக தமிழில் கால்லூன்றவைத்தது.

     முறைப்படி உருது

    முறைப்படி உருது

    தழிழில் 500க்கும் மேற்பட்ட பாடல்கள், இந்தியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களையும், தெலுங்கு, மலையாளம், மராத்தி, போஜ்புரி, பெங்காலி, கன்னடம் ஆகிய பிறகு மொழிகளில் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். கஜல் பாடகராக வேண்டும் என்பதற்காக உருது மொழியை முறைப்படி கற்றுக்கொண்டார்.

     30 ஆல்பம்

    30 ஆல்பம்

    இசையின் மீது கொண்ட தீராத காதலால் கிட்டத்தட்ட 30 ஆல்பங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இதில் பல ஆல்பம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று சிறந்த இசையமைப்பாளர் என்ற பெருமையை இவருக்கு பெற்றுத்தந்தது. இவரும் இவருடைய நண்பர் லெஸ்லி லூயிஸ் இணைத்து கலோனியல் கசின்ஸ் குழு வெளியிட்ட கிஷ்ணா நீ வேதமே ஆல்பம் சாங் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு பட்டிதொட்டி எங்கும் ஒளிந்தது.

     பல விருதுகள்

    பல விருதுகள்

    கிளாஸ் அன்டு மாஸ் சிங்கரான ஹரிஹரன் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார். இதுவரை 2 தேசிய விருதுகள் பெற்றுள்ளார். ஹிந்தி மற்றும் மராத்தி படத்திற்கும் இவ்விருதுகள் வழங்கப்பட்டன. பத்மஸ்ரீ விருது 2 முறை, தமிழக அரசு விருது, ஆந்திர, கேரள மாநில விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்.

     ஹிட் பாடல்

    ஹிட் பாடல்

    அலைப்பாயுதே படத்தில் வரும் பச்சை நிறமே பச்சை நிறமே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ரகசியமாய் ரகசியமாய், உதயா உதயா, வானவில்லையே பார்த்தேன், இரவா பகலா, உயிரே உயிரே இன்னும் ஏராளமான பாடல்களை சொல்லிக்கொண்டே போகலாம். எத்தனை பாடல்களும் அழகாக நம்மை வருடி தாலாட்டும் பாடல்கள்.

     ரசிகர்கள் ஆர்வம்

    ரசிகர்கள் ஆர்வம்

    சினிமாவில் பாடுவதை விட மேடை நிகழ்ச்சிகளில் பாடுவதையே அதிகம் விரும்பும் ஹரிஹரன். தற்போது, தொலைக்காட்சிகளிலும், இசைப்போட்டிகளில் நடுவராகவும் இருந்து வருகிறார். இசைக்கடலின் முன்னோடியாக போற்றப்படும் ஹரிஹரன் முன்பு போல மீண்டும் படங்களில் அதிகம் பாட வேண்டும் என்பது இவரது இசை ரசிகர்களின் ஆர்வம்.

    Read more about: hariharan ஹரிஹரன்
    English summary
    Mass Singer Hariharan Special Roundup
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X