தளபதி 63 மாஸ் அப்டேட்: இதை கேட்டால் ரசிகர்கள் குஷியாகிடுவீங்க
Recommended Video
சென்னை: தளபதி 63 படம் பற்றி முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தளபதி 63. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. நயன்தாரா தனது பகுதியை நடித்து முடித்துவிட்டு தர்பார் படத்தில் நடிக்க மும்பை சென்றுவிட்டார்.
இந்நிலையில் தளபதி 63 குறித்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்
தளபதி 63 படத்தில் விஜய்க்கு அக்காவாக நடிக்கிறாராம் தேவதர்ஷினி. அக்காவும், தம்பியும் சேர்ந்து காமெடி செய்யும் காட்சிகள் படத்தில் உள்ளதாம். காமெடி என்று வந்துவிட்டால் விஜய் தெறிக்க விடுவார். தேவதர்ஷினியும் அசால்டாக காமெடி பண்ணுவார்.

தம்பி
விஜய்க்கு எப்பொழுதுமே தங்கையுடன் சேர்ந்து காமெடி பண்ணும் காட்சிகள் ராசியானது. சொல்லப் போனால் அந்த காட்சிகள் எப்பொழுதுமே சூப்பர் ஹிட்டாகி பலகாலம் பேசப்படும். இந்நிலையில் தளபதி 63 படத்தில் தங்கச்சிக்கு பதிலாக அக்காவுடன் சேர்ந்து காமெடி பண்ணும் காட்சிகள் உள்ளது.

வேலாயுதம்
கில்லி, திருப்பாச்சி, வேலாயுதம் ஆகிய படங்களில் விஜய் தனது தங்கையுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி காட்சிகள் ஹிட்டாகின. என்ன தளபதி 63 படத்தில் அக்கா சென்டிமென்ட். அதுவும் ஒர்க்அவுட்டாகிவிடும் என்று நம்புவோமாக.

கொலை
நண்பன் கதிரின் கொலைக்கு நியாயம் கேட்டு விஜய் போராடும் படம் என்பதால் ரொம்ப சீரியஸாக இருக்குமோ என்று கருதப்பட்டது. இந்நிலையில் அவர் அக்காவுடன் சேர்ந்து காமெடி பண்ணுவது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











