பிறந்தநாள் அதுவுமா கோப்ரா இயக்குநர் அஜய் ஞானமுத்து சொன்ன அந்த வார்த்தை.. குஷியான ரசிகர்கள்!

சென்னை: சியான் விக்ரமின் கோப்ரா படத்தை இயக்கி வரும் இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் 32வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

7 ஆம் அறிவு, துப்பாக்கி எனும் இரு மெகா பிளாக்பஸ்டர் படங்களில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுக்கு உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் அஜய் ஞானமுத்து.

இவர் இயக்கத்தில் வெளியான டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன.

ஹேப்பி பர்த்டே அஜய்

ஹேப்பி பர்த்டே அஜய்

தமிழ்நாட்டின் திருச்சியில் 1988ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி பிறந்தவர் அஜய் ஞானமுத்து. குறும்படங்களை இயக்கி வந்த இவர், கலைஞர் டிவியில் ஒளிபரப்பான நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கினார். அந்த நிகழ்ச்சியில் சிறப்பான ஷார்ட் பிலிம்களை இயக்கிய அஜய், அப்படியே ஏ.ஆர். முருகதாஸ் உடன் உதவி இயக்குநராக சேர்ந்து கொண்டார்.

ஆரம்பமே மிரட்டல்

ஆரம்பமே மிரட்டல்

2015ம் ஆண்டு அருள்நிதி, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர் நடிப்பில் இவர் இயக்கிய டிமான்டி காலனி பேய் படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூல் ரீதியான வெற்றியையும் இவருக்கு பெற்றுத் தந்தது. காமெடி பேய் படங்களுக்கு நடுவே சின்ன டீமை வைத்துக் கொண்டு மிரட்டல் பேய் படத்தை கொடுத்து அசத்தி இருந்தார் அஜய் ஞானமுத்து.

நயன்தாரா, விஜய்சேதுபதி

நயன்தாரா, விஜய்சேதுபதி

நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு மீண்டும் நயன்தாரா, விஜய்சேதுபதி கூட்டணியில் இமைக்கா நொடிகள் எனும் சைக்கோ திரில்லர் படத்தை இயக்கி வேற லெவல் வெற்றியை பெற்றார். பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப்பை மிரட்டல் வில்லனாக களமிறக்கி இருந்தார். அதர்வா மற்றும் ராஷி கன்னாவின் லவ் ஸ்டோரி என ஏகப்பட்ட டிராக்குகளை அழகா அடுக்கி கொடுத்து இருந்தார்.

டிரெண்டாகும் கோப்ரா

டிரெண்டாகும் கோப்ரா

இயக்கிய இரண்டு படங்களும் பெரும் வெற்றியை பெற்ற நிலையில், அடுத்து ஒரு மாபெரும் வெற்றிக்காக சியான் விக்ரமுடன் இணைந்து, கோப்ரா படத்தை இயக்கி வருகிறார் அஜய் ஞானமுத்து. கொரோனா லாக்டவுன் மட்டும் இல்லாமல் இருந்தால் இந்நேரம் அந்த படமும் ரிலீசாகி இருக்கும். அஜய் ஞானமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு #Cobra என்ற ஹாஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தயாரிப்பாளர் வாழ்த்து

தயாரிப்பாளர் வாழ்த்து

கோப்ரா படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார், இயக்குநர் அஜய் ஞானமுத்துவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி ட்வீட் போட்டுள்ளார். மேலும், சென்னையில் அவரது பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாட திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால், மதுரையில் அவர் தற்போது இருப்பதால், ஷூட்டிங் தொடங்கும் போது பிறந்தநாளை கொண்டாடி விடலாம் எனக் கூறியுள்ளார்.

அஜய் சொன்ன அந்த வார்த்தை

அஜய் சொன்ன அந்த வார்த்தை

தயாரிப்பாளருக்கு நன்றி சொன்ன இயக்குநர் அஜய் ஞானமுத்து, சீக்கிரமாகவே கோப்ரா ஷூட்டிங்கை ஆரம்பிப்பது குறித்தும், படப்பிடிப்பில் தான் கலந்து கொண்டு வெகு விரைவில் வேலையை ஆரம்பிக்கும் அசத்தலான அப்டேட்டை கொடுத்து சியான் ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளார்.

பறக்கும் மீம்ஸ்

பறக்கும் மீம்ஸ்

தளபதி விஜய்யும் சியான் விக்ரமும் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. விஜய் ரசிகர்களும், விக்ரம் ரசிகர்களும் நட்பாக பழகி வருவது தான் இதில் ஹைலைட்டான விஷயமே. அஜய் ஞானமுத்துவின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் சொல்லி, மீம்களை தெறிக்கவிட்டு விஜய் ரசிகர்களும் வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X