கள்ள உறவு சர்ச்சையில் சிக்கிய பிரபலம்.. பிக் பாஸ் தமிழ் 5ல் களமிறங்கப்போறது இவர் தானாம்!

சென்னை: கடந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன் உள்ளிட்ட குக் வித் கோமாளி பிரபலங்கள் இடம்பெற்ற நிலையில், இந்த ஆண்டும் அதே போல இருக்கும் என ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தனர்.

ஆனால், ரசிகர்களுக்கு ஒரு ஷாக்கிங் ட்விஸ்டாக குக் வித் கோமாளி பிரபலங்கள் பல பேர் சினிமாவில் படு பிசியாகி விட்டனர்.

இது விஜய் டிவிக்கே பெரிய ஷாக் தான். பிக் பாஸ் தமிழ் சிசன் 5ல் புதிதாக யாரை கொண்டு வருவது என தேடியவர்களுக்கு சின்னத்திரை நடிகர் ஒருவர் சிக்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

போட்டி வந்தாச்சு

போட்டி வந்தாச்சு

நம்பர் ஒன் ரியாலிட்டி ஷோவாக கலக்கிக் கொண்டிருந்த பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி கடந்த சீசனில் பெரிதாக சோபிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக விஜய் டிவியின் குக் வித் கோமாளி, சன் டிவியில் தற்போது மாஸ்டர் செஃப், ஜி தமிழில் சர்வைவர் என ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்கள் களமிறங்கி உள்ளன.

ரொம்ப லேட்

ரொம்ப லேட்

கடந்த ஆண்டை போலவே கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. மற்ற டிவி தொடர்கள் எல்லாம் கடகடவென ரெடியாகி வரும் நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போதான் வரும் என அதன் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

கோமாளிகள்

கோமாளிகள்

குக் வித் கோமாளி சீசன் ஒன்றில் கலந்து கொண்ட ரேகா, ரம்யா பாண்டியன் உள்ளிட்டோரை அப்படியே பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளர்களாக களமிறக்கினர். மேலும், ஒட்டுமொத்தமாக விஜய் டிவி புராடெக்ட்கள் தான் என்கிற முத்திரையும் குத்தப்பட்டது. இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 5லும் குக் வித் கோமாளி பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

படங்களில் பிசி

படங்களில் பிசி

குக் வித் கோமாளி சீசன் 2வில் கலந்து கொண்டு கலக்கிய புகழ், ஷிவாங்கி, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லக்‌ஷ்மி உள்ளிட்ட பலரும் சினிமாவில் பிசியாகி விட்டனர். அதனால், சினிமா வாய்ப்பு கிடைக்காத சில கோமாளிகள் மட்டுமே கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

யார் இந்த ஈஸ்வர்

யார் இந்த ஈஸ்வர்

கல்யாண பரிசு, கல்யாணம் முதல் காதல் வரை, தேவதையை கண்டேன், ஆபிஸ், ராஜா ராணி, நாம் இருவர் நமக்கு இருவர், மிஸ்டர் அண்ட் மிஸஸ் கில்லாடி சீசன் 2 உள்ளிட்ட சின்னத்திரை தொடர்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் நடித்துள்ளவர் தான் நம்ம புதிய பிக் பாஸ் போட்டியாளர் ஈஷ்வர். இவனுக்கு தண்ணியில்ல கண்டம் படத்திலும் இவர் நடித்துள்ளார்.

கள்ள உறவு சர்ச்சை

கள்ள உறவு சர்ச்சை

தேவதையை கண்டேன் நிகழ்ச்சியில் உடன் நடித்த நடிகை மகாலட்சுமி உடன் தனது கணவருக்கு கள்ளத் தொடர்பு இருப்பதாக ஈஸ்வரின் மனைவி நடிகை ஜெயஸ்ரீ தற்கொலைக்கு முயற்சித்தது மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியது. அந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஈஸ்வர் தனது மனைவிக்கும் மகாலட்சுமியின் கணவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி இருந்தார். இப்படி கள்ள உறவு சர்ச்சையை கொண்ட நடிகரை களமிறக்கி பிக் பஸ் நிகழ்ச்சி டிஆர்பியை எகிற வைக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஷிவாங்கி வரணும்

ஷிவாங்கி வரணும்

நடிகர் ஈஸ்வர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், குக் வித் கோமாளி சீசன் 2வை தனது காமெடி பேச்சால் வேற லெவலுக்கு கொண்டு சென்ற ஷிவாங்கி மற்றும் அஸ்வின் பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கமல் எப்படி?

கமல் எப்படி?

அரசியலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத நிலையில், மீண்டும் சினிமாவில் பிசியாகி உள்ளார் நடிகர் கமல்ஹாசன். விக்ரம், பாபநாசம் 2, வெற்றிமாறன் உடன் ஒரு படம், இந்தியன் 2 என ஏகப்பட்ட படங்கள் உள்ள நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியையும் கமலே தொகுத்து வழங்குவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சீரியல் நடிகர்

சீரியல் நடிகர்

வழக்கம் போல இந்த முறையும் சீரியல் நடிகர்களை நம்பியே பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்த விஜய் டிவி திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் டிவி சீரியல்களில் பிரபலமாகி வரும் நடிகர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டு வரும் நிலையில், நடிகர் ஈஸ்வர் பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ளப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X