twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஷயம் தெரியுமா? சயின்ஸ் ஃபிக்ஷன் வெப்சீரிஸ் தயாரிக்கும் தோனி.. சீக்கிரம் நடிக்க வந்துடுவார் போல!

    |

    மும்பை: சமீபத்தில் சர்வதேச போட்டிகளில் ஓய்வை அறிவித்த தல தோனி புதிதாக சயின்ஸ் ஃபிக்‌ஷன் வெப்சீரிஸ் ஒன்றை தயாரிக்க உள்ளார்.

    ஐபிஎல் 2020 போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தலைமை தாங்கி வழி நடத்தி வருகிறார் தோனி.

    முதல் போட்டியை சூப்பராக வென்ற நிலையில், அடுத்த இரு போட்டிகள் சொதப்பியது ரசிகர்களை ரொம்பவே அப்செட் செய்திருக்கிறது.

    கிரிக்கெட்டுக்கு ஓய்வு

    கிரிக்கெட்டுக்கு ஓய்வு

    இந்திய அணியின் கேப்டனாக இருந்து உலக கோப்பையை ஜெயித்துக் கொடுத்த மகேந்திர சிங் தோனி, கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். இனிமேல் இந்திய ஜெர்ஸி அணிந்து விளையாட மாட்டாரே என்கிற வருத்தம் அவரது ரசிகர்களை ரொம்பவே வாட்டியது.

    சென்னை அணிக்கு

    சென்னை அணிக்கு

    ப்ளூ ஜெர்ஸியை விட்டு விலகினாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் ஜெர்ஸியை தோனி இன்னமும் விடவில்லை. அடுத்த ஆண்டு எப்படி என்று தெரியவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களான ரெய்னா, பிராவோ, ஹர்பஜன் சிங் இல்லாதது அணிக்கு பெரும் பின்னடைவை தந்துள்ளது.

    சினிமாவில் ஆர்வம்

    சினிமாவில் ஆர்வம்

    கிரிக்கெட்டை தாண்டி தல தோனிக்கு சினிமா மீது மிகப்பெரிய ஆர்வம் உள்ளது. மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான எம்.எஸ். தோனி அன்டோல்ட் ஸ்டோரி படத்திற்காக ஏகப்பட்ட புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். சுஷாந்த் சிங்குடன் நெருங்கிய நட்பும் கொண்டார்.

    சூர்யா பிடிக்கும்

    சூர்யா பிடிக்கும்

    அந்த படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்த மகேந்திர சிங் தோனி, நடிகர் சூர்யாவை தனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சூர்யாவின் குழந்தைகளிடமே கூறிய தருணம் ரசிகர்களை நெகிழ வைத்தது. ரஜினியை சந்தித்து ஆசி வாங்கினார். சிஎஸ்கே அணியின் தூதராக கலந்து கொண்ட விஜய்யுடனும் நட்பு பாராட்டினார்.

    வெப்சீரிஸ் தயாரிக்கிறார்

    வெப்சீரிஸ் தயாரிக்கிறார்

    இந்நிலையில், தோனி என்டர்டெயின்மென்ட் எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ள தல தோனி, அகோரி மற்றும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் கலந்து ஃபேண்டஸி வெப்சீரிஸை தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தோனியின் மனைவி சாக்‌ஷி தோனி தான் அந்த தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.

    என்ன கதை

    என்ன கதை

    இளம் எழுத்தாளர் எழுதியுள்ள இன்னமும் வெளிவராத சயின்ஸ் ஃபிக்‌ஷன் நாவல் பிடித்துப் போன நிலையில், முதலில் அதை படமாக எடுக்க முடிவு செய்தனர். ஆனால், பட்ஜெட், நடிகர்கள் என ஏகப்பட்ட பிரச்சனைகள் இருப்பதால், அதனை வெப்சீரிஸாக உருவாக்க முடிவு செய்துள்ளனராம்.

    கடந்த ஆண்டு

    கடந்த ஆண்டு

    தோனி என்டர்டெயின்மென்ட் எனும் தயாரிப்பு நிறுவனத்தை கடந்த ஆண்டு தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் கடந்த ஆண்டே ஒரு குட்டி டாக்குமென்ட்ரி படத்தை தயாரித்துள்ளார். பாலிவுட் இயக்குநர் கபீர் கான் இயக்கத்தில் உருவான "Roar of the Lion" எனும் அந்த டாக்குமென்ட்ரி படத்தில் 2 ஆண்டுகள் தடைக்கு பின்னர் சென்னை அணி மீண்டும் ஐபிஎல் போட்டியில் கலந்து கொண்ட நிகழ்வுகள் படமாக்கப்பட்டு இருந்தன.

    தோனி நடிப்பாரா

    தோனி நடிப்பாரா

    உலகளவில் தல தோனிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். கிரிக்கெட் போட்டியை தாண்டி ஏகப்பட்ட விளம்பர படங்களிலும் நன்றாகவே நடித்து வருகிறார் கிரிக்கெட் வீரர் தோனி. தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டு இருக்கும் நிலையில், தல தோனி நாயகனாக நடிப்பாரா? என்கிற எதிர்பார்ப்பும் விருப்பமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. விரைவில், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என சாக்‌ஷி தோனி கூறியுள்ளார்.

    English summary
    Cricketer Mahendra Singh Dhoni, who forayed in the entertainment industry with a documentary as producer last year, will next be backing a mythological sci-fi web-series.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X