போட்றா வெடிய.. புள்ளிங்கோ எதிர்பார்ப்பு வீணாகல.. தளபதி 64 மாஸ் அப்டேட் இதுதான்!

சென்னை: தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் டிசம்பர் 31ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

நண்பகலில் இருந்து லஞ்ச் கூட சாப்பிடாமல் தளபதி 64 அப்டேட்டுக்காக காத்திருந்து ட்வீட் போட்டுக் கொண்டிருந்த தளபதி ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரியே இந்த நியூஇயர் செலிபிரேஷனாக தளபதி 64 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீசாகவுள்ளது.

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூ இயர் கொண்டாட்டம்

தளபதி விஜய் ரசிகர்களுக்கு வரும் நியூ இயர் ஆரம்பமே அட்டகாசமாக அமையவுள்ளது. தளபதி 64 டேக்கை டிரெண்ட் செய்து வரும் ரசிகர்கள், புது டைட்டில் டேக்கை ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இறுதி வரை டிரெண்ட் செய்து அடுத்த ஆண்டும் ட்விட்டரில் தெறிக்க விடுவார்கள்.

சம்பவம்?

சம்பவம்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, ரம்யா, சவுந்தர்யா, பிரேம், அர்ஜுன் தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். மேலும், இந்த படத்திற்கு சம்பவம் என்ற டைட்டில் வைக்கப்படலாம் என ரசிகர்கள் ஃபேன் மேட் போஸ்டர்களை உருவாக்கி வருகின்றனர்.

அனிருத் இசை

அனிருத் இசை

கத்தி படத்திற்கு பிறகு தளபதி விஜய்க்கு இந்த படத்தில் அனிருத் இசையமைத்து வருகிறார். செல்ஃபி புள்ள பாடலை பீட் செய்யும் அளவுக்கு பக்காவான ஆல்பத்தை அனிருத் கொடுப்பார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். கைதி படத்தில் பாடல்கள் இல்லாத நிலையில், தளபதி 64 படத்தில் எத்தனை பாடல்கள் இடம்பெறும் என்பதும் ரசிகர்களின் சந்தேகமாகவே இருக்கிறது.

தரமான அப்டேட்

தரமான அப்டேட்

#Thalapathy64update, #Thalapathy64FirstLook என இரண்டு ஹாஷ்டேக்குகளை உருவாக்கி இந்தியளவில் தளபதி ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். தற்போது வெளிவந்துள்ள அப்டேட் தரமான அப்டேட் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

பிகிலை பீட் பண்ணனும்

பிகிலை பீட் பண்ணனும்

தளபதி 64 திரைப்படம் லோ பட்ஜெட் படம் என்றாலும், அதில் நடித்து வருவது தளபதி விஜய் என்பதால் பிகில் படத்தின் வசூலை இந்த படம் பீட் பண்ண வேண்டும் என்றும், பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விட அதிக லைக்குகளை பெற்று தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக் உலகளவில் டிரெண்ட் செய்ய வேண்டும் என்றும் விஜய் ரசிகர்கள் வேட்டைக்கு ரெடியாகி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X