எவ்ளோ நாளாச்சு இப்படி பார்த்து.. மீனாவும் குஷ்புவும் ரஜினி கூட ஆட்டம் போடும் ‘மருதாணி’நாளை ரிலீஸ்!
சென்னை: அண்ணாத்த படத்தின் மூன்றாவது பாடலான 'மருதாணி' பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
தீபாவளி ரிலீசாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், சன் பிக்சர்ஸ் அது தொடர்பான அப்டேட்களை அடுத்தடுத்து இறக்கி ரஜினிகாந்த் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
மீனாவும் குஷ்புவும் ரஜினிகாந்த் உடன் நடனமாடும் அட்டகாச புகைப்படத்தை தற்போது வெளியிட்டு ரசிகர்களை 90களுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அண்ணாத்த அப்டேட்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள அண்ணாத்த படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளது.

லாரிகள் பறக்கும் டீசர்
ஏற்கனவே அண்ணாத்த டைட்டில் சாங், நயன்தாராவுடன் ரஜினி நடனமாடும் சார சாரக் காத்து உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி ஹிட்டடித்த நிலையில், சமீபத்தில் வெளியான அண்ணாத்த டீசரில் ரஜினிகாந்தின் வெறித்தனமான ஆக்ஷன் காட்சிகள் லாரிகள் வெடித்து பறக்கும் காட்சிகளும் கூஸ் பம்ப்ஸ் கொடுத்தன.

மருதாணி சாங்
திருமண வைபவத்தில் மெஹந்திக்கு என்றே ஒரு நாள் ஒதுக்கப்பட்டு வரும் நிலையில், அதை குறிக்கும் வகையில் இந்த மருதாணி பாடல் உருவாகி உள்ளதா? என ரசிகர்கள் நேரடியாக இசையமைப்பாளர் இமானுக்கே ட்வீட் செய்து கேட்டு வருகின்றனர். நிச்சயம் இந்த பாடல் குடும்பங்கள் கொண்டாடும் பாடலாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்ளோ நாளாச்சு
குஷ்பு மற்றும் மீனா இருபுறமும் ஆடி நிற்க நடுநாயகமாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடனம் ஆடும் புகைப்படம் வெளியாகி செம வைரலாகி வருகிறது. குஷ்பு மீனாவுடன் ஜோடி போட்டு ரஜினிகாந்த் ஆடி பாடியதை எல்லாம் பார்த்து எவ்ளோ நாளாச்சு என ஃபீல் பண்ணிய ரசிகர்களுக்கு இந்த பாடல் பெரிய ட்ரீட்டாக அமையும் என்பது கன்ஃபார்ம்.

கீர்த்தி சுரேஷை காட்டியிருக்கலாம்
அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள் இன்று என்பதால், கீர்த்தி சுரேஷ் ரஜினி இருக்கும் புகைப்படத்தை ஏதாவது சன் பிக்சர்ஸ் அப்டேட்டாக கொடுத்திருந்தால் இன்னமும் நல்லா இருந்திருக்கும் என்று கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தீபாவளி பரிசு இருக்கு
இந்த தீபாவளி ஒட்டுமொத்த ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் செம பரிசு காத்திருக்கிறது திரையரங்குகளில் என்பதை ஒவ்வொரு அப்டேட்டிலும் நிரூபித்து வருகிறார் இயக்குநர் சிறுத்தை சிவா. விஸ்வாசம் வெற்றியை மிஞ்சும் அளவுக்கு அண்ணாத்த வெற்றி பெறும் என பெரும் நம்பிக்கையுடன் சிறுத்தை சிவா மற்றும் அண்ணாத்த படக்குழுவினர் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











