பேய் ஹிட்.. அட்டகாசமாக வெளியானது ஆர்யாவின் அரண்மனை 3 டிரைலர்.. விவேக் காமெடியை மிஸ் பண்ணிடாதீங்க!
சென்னை: ஆர்யாவின் அரண்மனை 3 திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
வரும் ஆயுத பூஜைக்கு சுந்தர்.சி இயக்கி நடித்துள்ள அரண்மனை 3 திரைப்படம் திரைக்கு வருகிறது.
ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர் விவேக்கின் காமெடி காட்சிகளை ரசிகர்கள் நிச்சயம் மிஸ் பண்ண மாட்டார்கள். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த படத்தை வெளியிடுகிறது.

அரண்மனை 3
அரண்மனை, அரண்மனை 2 என சுந்தர். சி இயக்கிய இரு படங்களும் கமர்ஷியல் ரீதியான வெற்றியை பெற்ற நிலையில், அரண்மனை 3 திரைப்படம் வரும் ஆயுத பூஜையை குறி வைத்து தியேட்டர்களில் வெளியாக காத்திருக்கிறது. இந்த படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பேய்த்தனமா இருக்கு
சரிகமா தமிழ் யூடியூப் தளத்தில் தற்போது வெளியாகி உள்ள அரண்மனை 3 டிரைலர் பேய்த்தனமா மிரட்டுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு அரண்மனையின் மற்ற பாகங்களை விட பிரம்மாண்டமாக இந்த படம் உருவாகி உள்ளது டிரைலரை பார்த்தாலே தெரிகிறது.

ஆர்யா தான் பேய்
கடந்த இரு பாகங்களிலும் நடிகை ஹன்சிகாவை சிலர் கொன்றுவிட அவர்களை பழிவாங்க பேயாக ஆண்ட்ரியா மற்றும் த்ரிஷா உடம்பில் ஏறிக் கொண்டு பழிவாங்கும் கதையாக வெளியான நிலையில், இந்த படத்தில் ஆர்யா உடம்பில் பேய் புகுந்து கொண்டு செய்யும் அட்டகாசங்கள் தான் கதை என்கிற தகவல்கள் கசிந்துள்ளன.

ரசகுல்லா ராஷி கன்னா
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என எந்த பக்கம் போனாலும் ராஷி கன்னா தான் சமீபத்தில் ஏகப்பட்ட படங்களில் நடித்து அசத்தி வருகிறார். அரண்மனை 3 படத்தின் டிரைலரில் அவர் மட்டும் தனியா துண்டா தெரிவது போல ஒவ்வொரு ஃபிரேமிலும் அவ்வளவு அழகாக இருக்கிறார் ராஷி கன்னா.

ஆண்ட்ரியா இருக்காங்க
அரண்மனை முதல் பாகத்தில் நடித்து மிரட்டிய நடிகை ஆண்ட்ரியா அரண்மனை 3ம் பாகத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சுந்தர். சிக்கு குழந்தை எல்லாம் இருப்பது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சிஜி மிரட்டல்களும், பிரம்மாண்ட செட்களும் வாயை பிளக்க வைக்கின்றன.
கன்ஃபார்ம் ஹிட்
சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு ஆர்யா நடிப்பில் அரண்மனை 3 படம் வெளியாக உள்ளதால் ஏகப்பட்ட ரசிகர்கள் அந்த படத்தை திரையரங்குகளில் காண ஆவலோடு காத்திருக்கின்றனர். படத்தின் டிரைலர் வேற இந்தளவுக்கு பவர்ஃபுல்லாக இருப்பதால் குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு சென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கிற பேச்சுக்கள் எழுந்துள்ளன.

விவேக் காமெடி
ஆர்யாவின் அரண்மனை 3 படத்திலும் காலமாவதற்கு முன்பாக நடிகர் விவேக் நடித்திருந்த நிலையில், இந்த டிரைலரின் கடைசி காட்சியில் விவேக் மற்றும் யோகி பாபுவின் கையை பேய் பிடித்திருக்க விவேக் சொல்லும் காமெடி பன்ச் வேற லெவலில் ரசிகர்களை சிரிக்க வைத்தாலும் நடிகர் விவேக் இல்லாததை எண்ணி ரசிகர்கள் கலங்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











