தீ விபத்து ஏற்பட்டது விஜய் பட செட்டில் இல்லை சூப்பர் ஸ்டார் பட செட்டில்

By Siva

Recommended Video

சிரஞ்சீவியின் சயீரா நரசிம்ம ரெட்டி பட செட்டில் பயங்கர தீ விபத்து- வீடியோ

ஹைதராபாத்: சிரஞ்சீவியின் சயீரா நரசிம்ம ரெட்டி பட செட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மகன் ராம் சரண் தேஜா தயாரிப்பில் சிரஞ்சீவி நடித்து வரும் வரலாற்று படம் சயீரா நரசிம்ம ரெட்டி. இந்த படத்தில் நயன்தாரா, தமன்னா, விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

Massive fire in Chiranjeevis Sye Raa Narasimha Reddy set

இந்த படத்திற்காக சிரஞ்சீவியின் பண்ணை வீட்டு வளாகத்தில் பிரமாண்ட செட் போட்டனர். தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள அந்த பண்ணை வீட்டில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

அந்த விபத்தில் ரூ. 2 கோடி மதிப்பிலான செட் எரிந்து சாம்பலானது. பண்ணை வீட்டில் இருந்து புகை வருவதை பார்த்த மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, உயிர் சேதம் எதுவும் இல்லை. நேற்று இரவு வரை அங்கு தான் படப்பிடிப்பு நடந்துள்ளது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

அந்த செட்டில் இன்று அமிதாப் பச்சன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட வேண்டி இருந்தது. ஆனால் தீ விபத்தால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X