GOAT.. தல தோனி, சிவகார்த்திகேயன் வர சீன்லாம் சும்மா தெறிக்குது.. வெங்கட் பிரபுவின் சம்பவம்

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படம் இன்று வெளியாகியிருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்கள் தங்களது உச்சக்கட்ட வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். ஒவ்வொரு சீனையும் அவர்கள் பயங்கரமாக என்ஜாய் செய்து பார்த்தார்கள். வெங்கட் பிரபு இவ்வளவு பெரிய சம்பவத்தை செய்வார் என்று தாங்கள் எதிர்பார்க்கவே இல்லை என்றும் கூறிவருகிறார்கள். படத்தில் சில காட்சிகளுக்கு ரசிகர்கள் உச்சக்கட்ட ஆராவாரம் செய்தனர்.

கோலிவுட்டின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. அவர் இயக்கும் படங்கள் என்றாலே கமர்ஷியல் ரூட்தான் என்றாலும் அதில் அவர் வைக்கும் ட்விஸ்ட்டுகளுக்கும், அவர் அமைக்கும் ஸ்க்ரீன் ப்ளேவுக்கும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மங்காத்தா, பிரியாணி ஆகிய படங்களில் அவர் வைத்த ட்விஸ்ட் எல்லாம் ட்ரேட் மார்க் என்று ரசிகர்கள் கூறுவார்கள். அப்படிப்பட்ட வெங்கட் பிரபு முதன்முறையாக விஜய்யை வைத்து GOAT படத்தை இயக்கியிருக்கிறார்.

goat vijay venkat prabhu

மாஸ் ரெஸ்பான்ஸ்: அஜித்தை வைத்து மங்காத்தா கொடுத்தது போல் விஜய்யை வைத்து GOAT படத்தை கொடுப்பாரா என்பதுதான் கடந்த சில காலமாக ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது. அந்தக் கேள்விக்கு தரமான பதிலை தனது மேக்கிங்கில் கொடுத்திருக்கிறார். இன்று வெளியான GOAT படத்துக்கு ரசிகர்கள் தங்களது முழு ஆதரவை கொடுத்திருக்கின்றனர். அதிலும் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

தப்பிய விஜய்: ஏனெனில் விஜய்யின் நடிப்பில் GOATக்கு முன்னதாக வெளியான மூன்று படங்களுமே விமர்சன ரீதியாக டல்லடித்திருந்தன. இதன் காரணமாக விஜய் ரசிகர்களும் அப்செட்டில் இருந்தார்கள். அந்த அப்செட்டை எல்லாம் அடித்து நொறுக்கியிருக்கிறார் என்று தளபதி ரசிகர்கள் கூறுகின்றனர். மேலும் இந்தப் படம் தளபதி விஜய்க்கு தரமான கம்பேக் என்றும் சமூக வலைதளங்களில் ஆங்காங்கே கமெண்ட்ஸ்களை பார்க்க முடிகிறது.

ஏகப்பட்ட சர்ப்ரைஸ்கள்: முக்கியமாக படத்தில் ஏகப்பட்ட சர்ப்ரைஸ்கள் இருக்கின்றன. படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்ததிலிருந்தே இதில் சிவகார்த்திகேயன் ஒரு கேமியோ செய்கிறார்; திரிஷா நடனமாடுகிறார் என்று கூறப்பட்டன. ஆனால் படத்தின் ப்ரோமோஷன்களில் அதை துளிக்கூட ரிவீல் செய்யவில்லை படக்குழு. ஆனல எதிர்பார்த்தபடியே சிவாவும், திரிஷாவும் படத்தில் இருக்கிறார்கள். திரிஷா நடனம் ஆடும் காட்சியில் எல்லாம் ரசிகர்கள் ஆர்பரிக்கின்றனர் திரையரங்குகளில்.

தல தோனி: அதேபோல் விஜயகாந்த்தையும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் கொண்டு வந்திருக்கிறார்கள். மேலும் தோனி இதில் கேமியோ ரோல் செய்கிறார் என்று கூறப்பட்டாலும் அதில் உண்மையில்லை என்பது அப்போதே பெரும்பாலானவர்களுக்கு தெரியும். அதேசமயம் படத்தின் முக்கியமான இடத்தில் ஐபிஎல் சென்னை மேட்சை வைத்து அங்கு காட்சிகளை அமைத்து; அதில் தல தோனியின் என்ட்ரென்ஸை ஒரு ஷாட்டில் வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு.

அந்த ஐபிஎல் மேட்ச் காட்சியில் தோனியை காண்பிக்கும்போது ஒட்டுமொத்த திரையரங்கும் விசில் சத்ததால் அதிர்கிறது. அந்தக் காட்சியின் மூலமும் ரசிகர்களை படத்தோடு ரொம்பவே கனெக்ட் செய்துவிட்டார் வெங்கட் பிரபு. அதேபோல் சிவகார்த்திகேயன் வரும் காட்சியிலும் தியேட்டர் அதிர்கிறது. இப்படி ஏகப்பட்ட சர்ப்ரைஸ்களை வைத்து படத்தை வேறு இடத்துக்கு கொண்டு சென்றுவிட்டார் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கூறிவருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X