மெகாஸ்டார் மம்முட்டியோட 'ஒன்' படம்... தமிழ் ட்ரெயிலர் வெளியாகியிருக்கு!
கொச்சி : நடிகர் மம்முட்டி நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்து சிறப்பான வரவேற்பை பெற்ற படம் ஒன்.
பினராயி விஜயனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த படம் தமிழிலும் விரைவில் வெளியாக உள்ளது. இதன் ட்ரெயிலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

யாத்ரா படம்
மெகாஸ்டார் மம்முட்டி சிறப்பான கதைக்களங்களில் தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வருகிறார். ஆந்திர முதலமைச்சர் ஒய் எஸ் ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் மம்முட்டி நடித்து வெளிவந்த படம் யாத்ரா. இந்த படம் சிறப்பான வரவேற்பை பெற்றது.

பினராயி வாழ்க்கை படம்
இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் வாழ்க்கை வரலாற்று படம் ஒன் என்ற பெயரில் எடுக்கப்பட்டது. சந்தோஷ் விஸ்வநாதன் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த படத்திலும் நடித்துள்ளார் மம்முட்டி. படத்தில் ஸ்ரீனிவாசன், ஜோஜூ ஜார்ஜ், உன்னி கிருஷ்ணன் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர்.

ரசிகர்களிடம் வரவேற்பு
கோபி சுந்தர் இசையமைப்பு படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது. இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில், நெட்ப்ளக்சில் படம் வெளியாகி கேரள ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுதது தற்போது இந்த படத்தின் தமிழ் வெர்ஷன் கூடிய விரைவில் வெளியாக உள்ளது.
ட்ரெயிலர் ரிலீஸ்
இதையடுத்து படத்தின் ட்ரெயிலர் வெளியாக உள்ளதாக நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. டப்பிங் செய்யப்பட்டுள்ள போதிலும் இந்த ட்ரெயிலர் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











