'வலிமை'யுடன் மோதல்.. இப்பவே ’தளபதி 64’ டைட்டில் வெளியாகிறதா?

அஜித்தின் 60வது படத்திற்கு ’வலிமை’ என தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ’தளபதி 64’ படத்தின் தலைப்பை அறிவிக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Thala 60: தல 60 படத்தின் தலைப்பு வெளியானது

சென்னை: தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் எப்பவும் அஜித் - விஜய் ஃபேன் வார் இருந்து கொண்டே இருக்கும்.

அஜித்தின் 60வது படத்தின் பூஜை நேற்று போடப்பட்ட நிலையில், வலிமை என்ற படத்தின் டைட்டிலும் அறிவிக்கப்பட்டு டிரெண்டானது.

இந்நிலையில், தற்போது 'தளபதி 64' பட டைட்டிலை வெளியிட எக்ஸ் பி ஃபிலிம் க்ரியேட்டர்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சர்ப்ரைஸ் டைட்டில்

சர்ப்ரைஸ் டைட்டில்

கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் விஜய் பட டைட்டில்கள், படத்தின் ரிலீசுக்கு முன்பு தான் சர்ப்ரைஸ் ஆக படக்குழு வெளியிடுவது வழக்கம். அந்த டைட்டிலும் வெளியிடுவதற்கு முன்பாகவே கசிந்து விட்டது போன்ற களேபரங்களும் விளம்பரங்களும் ஏகபோகமாக களைகட்டும்.

பிகில் ஃபீவர்

பிகில் ஃபீவர்

அடுத்த வெள்ளிக்கிழமை தீபாவளி சரவெடியாக பிகில் படம் வெளியாகவுள்ள நிலையில், 'தளபதி 64' படத்தின் தலைப்பை வெளியிடலாமா என தயாரிப்பு தரப்புக்கு சொந்தமான அதிகாரப்பூர்வ ஃபேன் பேஜில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது. ஆனால், தற்போது பிகில் ஃபீவரில் ரசிகர்கள் இருப்பதால், நியூ இயருக்கு டைட்டிலை வெளியிடுங்கள் என சில ரசிகர்களே கூறியுள்ளனர்.

போட்டா போட்டி

போட்டா போட்டி

அஜித்தின் 60வது படத்தின் பூஜை நேற்று போடப்பட்டு, வலிமை என்ற டைட்டிலும் அறிவிக்கப்பட்ட நிலையில், 'தளபதி 64' படத்தின் தலைப்பையும் வெளியிட்டு டிரெண்ட் செய்யலாம் என தயாரிப்பு தரப்பான எக்ஸ் பி ஃபிலிம் க்ரியேட்டர்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளிக்கு டபுள் ட்ரீட்

தீபாவளிக்கு டபுள் ட்ரீட்

பிகில் ரிலீசாகும் அக்டோபர் 25ம் தேதி அல்லது தீபாவளி பண்டிகை தினத்தன்றோ ‘தளபதி 64' பட டைட்டிலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட முடிவு செய்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இதனால், விஜய் ரசிகர்களுக்கு தீபாவளியன்று டபுள் ட்ரீட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X