கோப்ராவா? அமரா? கிறிஸ்துமஸ்க்கு சியான் விக்ரம் கொடுக்கப் போகும் பரிசு என்னவா இருக்கும்?
சென்னை: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'சியான் விக்ரம் 58' படத்திற்கான அதிகாரப்பூர்வ டைட்டில் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சியான் விக்ரம் ரசிகர்களுக்கு இன்று மாலை கிறிஸ்துமஸ் பரிசு காத்திருக்கிறது. இதுகுறித்த அப்டேட் தற்போது வெளியாகி விக்ரம் ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளது.
# ChiyaanVikram58 என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி சியான் விக்ரம் ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

சியான் விக்ரம் 58
டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரமின் 58வது படம் உருவாகி வருகிறது. கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் முதல் முறையாக இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கே.ஜி.எஃப் ஹீரொயின் ஸ்ரீநிதி ஷெட்டி விக்ரமுக்கு ஜோடியாக நடித்து வரும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
கோப்ராவா? அமரா?
'சியான் விக்ரம் 58' படத்தின் டைட்டில் கோப்ரா அல்லது அமர் ஆக இருக்கும் என தகவல்கள் பரவி வருகின்றன. கோப்ரா தான் பக்காவான டைட்டில் என விக்ரம் ரசிகர்கள் கருதி வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் பரிசு
இந்நிலையில், 'சியான் விக்ரம் 58' படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் லுக் இன்று மாலை 6 மணிக்கு விக்ரம் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் தின பரிசாக வெளியாகவுள்ளது. அதுகுறித்த அப்டேட் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
டைட்டில் லுக்
'சியான் விக்ரம் 58' டைட்டில் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இதற்கு முன்னதாக வெளியான டிமான்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகளின் வித்தியாசமான டைட்டில் லுக் டிசைன்களை பதிவிட்டுள்ள இந்த ரசிகர், இதை விட வெறித்தனமாக ‘சியான் விக்ரம் 58' டைட்டில் லுக் இருக்கும் என எதிர்பார்க்கிறார்.
ரொம்ப எதிர்பார்க்காதீங்கடா
டைட்டில் மட்டும் ஒரு எம்டி பேக்ரவுன்ட்ல வரும்.. ரொம்ப எதிர்பார்க்காதீங்கடா ... அடுத்து தலைவன் லுக் பொங்கலுக்கு ட்ரீட்.. என இந்த ரசிகர் ட்வீட் போட்டுள்ளார். அதாவது இன்று மாலை டைட்டில் லுக் மட்டும் தான் வரும் சியான் விக்ரமின் லுக் வராது எனக் குறிப்பிட்டுள்ளார்.
டிரெண்ட் பண்ணுங்க
அஜித், விஜய் ரசிகர்களை போல இன்னைக்கு விக்ரம் டைட்டில் லுக்கை டிரெண்ட் பண்ணி முதல் இடத்துக்கு கொண்டு வரணும் என சியான் ரசிகர்கள் வெறித்தனமாக கிளம்பியுள்ளனர்.
குழப்பமா இருக்கே
டைட்டில் மட்டுமா இல்லை சியானோட லுக்கும் சேர்ந்து வருமா? குழப்பமா இருக்கே? என சியான் விக்ரம் ரசிகர்களே ட்ரோல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











