சார்பட்டா உலகம்...வித்தியாசமாக ப்ரோமோ வெளியிட்ட பா.ரஞ்சித்
சென்னை : ரஜினி நடித்த காலா படத்தை இயக்கிய டைரக்டர் பா.ரஞ்சித், நீண்ட காலமாக இயக்கி வரும் படம் 'சார்பட்டா பரம்பரை'. 1980 களில் வட சென்னையில் காணப்பட்ட கிக் பாக்சிங் கலாச்சாரத்தை பின்புலமாக வைத்து எடுக்கப்படும் படம் இது.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் சார்பட்டா பரம்பரையின் உலகம் இன்று காலை 11 மணி முதல் வெளியிடப்படும் என்ற வித்தியாசமான ப்ரோமோவை நேற்று வெளியிட்டார்.
அதாவது, சார்பட்டா பரம்பரை படத்தின் கேரக்டர்களை அறிமுகப்படுத்த உள்ளதாக பா.ரஞ்சித் அறிவித்திருந்தார். அதன் படி, படத்தின் ஹீரோவான ஆர்யா இப்படத்தில் பீம்ஜி என்ற கேரக்டரில் நடிக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் ஆர்யா, துஷாரா, கலையரசன், சஞ்சனா நடராஜன், பசுபதி, ஜான் விஜய், சந்தோஷ் பிரதாப், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











