நெக்ஸ்ட் சூட்டிங் தான் கண்ணா.. ரஜினிகாந்தே சொல்லிட்டாரே.. ஜெயிலர் படப்பிடிப்பு எப்போ தெரியுமா?

சென்னை: டெல்லி, ஆளுநர் என ரஜினிகாந்தின் திடீர் பயணங்களும் சந்திப்புகளும் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலையே கிளப்பி உள்ளன.

ஆனால், மீண்டும் தான் அரசியலுக்கு வரமாட்டேன் என்பதை உறுதிப்படுத்தி உள்ள ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் மாஸ் அப்டேட்டையும் கொடுத்துள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

#Rajinikanth என்கிற ஹாஷ்டேக்கை சும்மா தெறிக்கவிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.

கமலுக்கு கிடைத்த வெற்றி

கமலுக்கு கிடைத்த வெற்றி

எந்திரன் படத்துக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடித்த பல படங்கள் அனைத்து விதமான ரசிகர்களையும் திருப்திப்படுத்தாத சூழலில், விஸ்வரூபம் 2 படத்தின் படு தோல்விக்கு பிறகு 4 ஆண்டுகள் கழித்து கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இண்டஸ்ட்ரி ஹிட் அடித்து விட்டது.

சிங்கம் களமிறங்கிடுச்சு

சிங்கம் களமிறங்கிடுச்சு

தனக்கான சரியான போட்டி இல்லாத நிலையில் தான் இத்தனை ஆண்டுகள் ரஜினிகாந்த் சும்மா படங்களில் நடித்து வந்தார் என்றும், தன்னுடைய பழைய போட்டி மீண்டும் களம் கண்டுள்ள நிலையில், சிங்கம் களமிறங்கிடுச்சுன்னு சொல்ற அளவுக்கு ஜெயிலர் படம் பிரம்மாண்ட வெற்றி பெறும் என ரஜினி ரசிகர்கள் பந்தயம் கட்டி வருகின்றனர்.

நெல்சன் சம்பவம் பண்ணுவாரு

நெல்சன் சம்பவம் பண்ணுவாரு

பீஸ்ட் படத்திலேயே பெரிய பிளான் போட்டாலும், அது சரியாக செட்டாகாத நிலையில் தான் நெல்சனுக்கு சறுக்கியது என்றும், ஜெயிலர் படத்தில் அந்த தவறு நடக்காமல் அவர் பார்த்துக் கொள்வார், குறிப்பாக ரஜினிகாந்த் இந்த முறை அனைத்து விஷயத்திலும் கவனமாக செயல்பட உள்ள நிலையில், ஜெயிலர் இண்டஸ்ட்ரி ஹிட் கன்ஃபார்ம் என பலரும் உறுதியாக நம்பி வருகின்றனர்.

மீண்டும் அரசியல் என்ட்ரியா

மீண்டும் அரசியல் என்ட்ரியா

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு சமீபத்தில் எம்பி பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் திடீரென டெல்லிக்கு சென்று திரும்பிய நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை ஏற்படுத்தி உள்ளது. மீண்டும் ரஜினி அரசியலுக்கு வரப் போகிறாரா? அல்லது அவருக்கு ஏதாவது பதவி கிடைக்கப் போகிறதா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

நெக்ஸ்ட் சூட்டிங் தான்

நெக்ஸ்ட் சூட்டிங் தான்

ஆனால், அந்த கேள்விக்கு ரஜினியே அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்பதை தெளிவாக சொல்லி விட்டார். மேலும், ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு எப்போ எனக் கேட்ட கேள்விகு நெக்ஸ்ட் சூட்டிங் தான் கண்ணா என சொல்லி விட்டு அவருக்கே உண்டான அந்த அற்புத சிரிப்பை சிரிக்க டிரெண்டிங் தீப்பிடித்துக் கொண்டது.

எப்போ ஆரம்பம்

எப்போ ஆரம்பம்

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார் உள்ளிட்ட நடிகர்கள் உள்ள ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 15 அல்லது ஆகஸ்ட் 22ம் தேதி தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில், சன் பிக்சர்ஸ் இயக்கத்தில் அனிருத் இசையில் ஜெயிலர் குறித்த மாஸ் அப்டேட்கள் அதிகாரப்பூர்வமாக வர உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X