சம்மர் சம்பவம் லோடிங்.. கிளைமேக்ஸை நெருங்கும் வலிமை.. இன்னும் சில நாட்கள் தான் ஷூட் இருக்காம்!

சென்னை: தல அஜித்தின் வலிமை படத்தின் ஷூட்டிங் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வலிமை படத்தின் அப்டேட் வராதா என காத்துக் கிடந்த தல ரசிகர்களுக்கு இது நிச்சயம் சந்தோஷமான செய்தி தான்.

விரைவில் வலிமை படத்தின் படப்பிடிப்பு முடியவுள்ள நிலையில், வரும் சம்மருக்கு வலிமை தரமான சம்பவமாக களமிறங்கும் என்பதில் சந்தேகமில்லை.

சதுரங்க வேட்டை இயக்குநர்

சதுரங்க வேட்டை இயக்குநர்

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் எச். வினோத், தல அஜித்தை வைத்து கடந்த 2019ம் ஆண்டு நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார். பிங்க் ரீமேக்காக அந்த படம் வெளியான நிலையில், எச். வினோத் ஸ்டைலில் வலிமை லோடிங்காகி வருகிறது.

செம சீக்ரெட்

செம சீக்ரெட்

டெக்னாலஜியின் வளர்ச்சியால் ரிலீசுக்கு முன்பே படங்கள் லீக் ஆகி வரும் நிலையில், தல அஜித்தின் வலிமை படம் குறித்த எல்லா தகவல்களையும் செம சீக்ரெட்டாக பாதுகாத்து வருகிறார் இயக்குநர் எச். வினோத். ரசிகர்கள் அப்டேட் கேட்டே நொந்து போன நிலையிலும், தரமான சம்பவத்திற்காகத் தான் எந்தவொரு அப்டேட்டையும் விடாமல் உள்ளார்.

படம் பேசும்

படம் பேசும்

இயக்குநர் எச். வினோத்தின் படங்களுக்கு பெரிதாக புரமோஷன் ஏதும் தேவையில்லை. படம் வெளியானாலே, நல்லா இருக்கு என விமர்சகர்களும் ரசிகர்களும் பாராட்ட, அந்த படமே பேசும் விதமாக இருக்கும். நிச்சயம் தல அஜித்தின் வலிமை படமும் அந்த இடத்தை பிடிக்கும் என்றே படக்குழு உறுதியாக நம்புகிறது.

முரட்டு வில்லன்

முரட்டு வில்லன்

வலிமை படத்தில் முரட்டு வில்லனாக டோலிவுட் ஹீரோ கார்த்திகேய கும்மகொண்டா நடித்து வருகிறார் என்கிற தகவலும் நாயகியாக ஹூமா குரேஷி நடித்து வருகிறார் என்கிற தகவல் மட்டுமே இதுவரை வலிமை படத்தில் இருந்து கசிந்துள்ளது.

கதைக் கரு

கதைக் கரு

பைக் ரேஸ் படத்தின் முக்கிய கருவாக இருக்கும் என்பது படப்பிடிப்பு தளத்தில் இருந்து கசிந்த சில வீடியோக்கள் மற்றும் பைக் ஸ்டன்ட்டின் போது அஜித்துக்கு ஏற்பட்ட காயங்களால் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. விவேகம் படத்தை போலவே இந்த படமும் சர்வதேச டீலிங் படமாக இருக்கும் என்றே தெரிகிறது.

வலிமை கிளைமேக்ஸ்

வலிமை கிளைமேக்ஸ்

சென்னையில் இன்னும் 13 நாட்கள் ஷூட்டிங் மட்டுமே மீதம் உள்ளதாகவும், அதன் பின்னர் மொரோக்காவிற்கு செல்லும் படக்குழு அங்கே ஒரு வார காலம் ஷூட்டிங் செய்ததும், வலிமை படம் மொத்தமாக ஷூட்டிங்கை நிறைவு செய்து விடும் என்கிற மாஸ் அப்டேட் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Recommended Video

அடிச்சான் பாரு Appointment order | தல படத்தில் இணைந்த CWC Pugazh | Filmibeat Tamil
சம்மர் சம்பவம்

சம்மர் சம்பவம்

வரும் சம்மருக்கு தல அஜித்தின் வலிமை படம் செம சம்பவமாக வெளியாகும் என்றே தெரிகிறது. இன்னும் 18 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு உள்ள நிலையில், விரைவில் வலிமை படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், டீசர், பாடல்கள் என ஏகப்பட்ட அப்டேட்கள் வெளியாகி சமூக வலைதளங்களை தெறிக்கவிடப் போகிறது. வெயிட்டிங்கிற்கு வொர்த்தா இருக்கும்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X