»   »  சூர்யா பேயாட்டம் ஆடும் 'மாஸ்' படத் தலைப்பு மாறுகிறது?

சூர்யா பேயாட்டம் ஆடும் 'மாஸ்' படத் தலைப்பு மாறுகிறது?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள மாஸ் படத்தின் தலைப்பு மாற்றப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.

வெங்கட்பிரவு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா ஆகியோர் நடித்துள்ள பேய் பிளஸ் காமெடி படம் மாஸ். வெங்கட்பிரபு படம் என்றால் பிரேம்ஜி அமரன் இல்லாமலா. அவரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


இந்நிலையில் படத்தின் தலைப்பு மாற்றப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.


மாஸ்

மாஸ்

படத்திற்கு மாஸ் என்ற தலைப்பு எல்லாம் மாஸாகத் தான் உள்ளது. ஆனால் ஆங்கிலத் தலைப்பு வைத்தால் அரசிடம் இருந்து வரி விலக்கு கிடைக்காது. அதனால் படத்தின் தலைப்பை மாற்றக்கூடும் என்று கூறப்படுகிறது.


சூர்யா பேய்

சூர்யா பேய்

மாஸ் படத்தில் சூர்யா பேயாக நடித்துள்ளாராம். படத்தின் ஒன்று அல்ல, இரண்டு அல்ல மொத்தம் 8 பேய்கள் அட்டகாசம் செய்கிறதாம். இத்தனை பேய்களுக்கு நடுவே நயன்தாரா நடித்துள்ளார்.


பேய் மோகம்

பேய் மோகம்

கோலிவுட் ரசிகர்களுக்கு என்ன ஆனதோ, ஏது ஆனதோ தெரியவில்லை. அண்மை காலமாக பேய் படங்கள் என்றால் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கிறார்கள். பேய் படமா அப்படி என்றால் கண்டிப்பாக ஹிட் தான் என்று சொல்லும் அளவுக்கு நிலைமை உள்ளது.


மாஸும்

மாஸும்

வெங்கட்பிரபு வித்தியாசமான பேய் கதையை படமாக்கியுள்ளாராம். ஏற்கனவே பேய் படம் ஓடும் தியேட்டர்களாக பார்த்து சென்று அந்த படத்தை ஹிட்டாக்கி வரும் ரசிகர்கள் மாஸ் படத்தையும் நிச்சயம் ஹிட்டாகிவிடுவார்கள் என்று பலர் கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக கூறுகிறார்கள்.


English summary
Buzz is that the title of Suriya's movie masss might be changed.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil