சும்மா தீயா இருக்கு வாத்தி ரெய்டு.. தளபதி ரசிகர்களுக்கு பக்கெட் பிரியாணி தான்.. அந்த அரசமரம்?
சென்னை: குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங் பாட்டெல்லாம் மாஸ்னா வாத்தி ரெய்டு பக்கா மாஸாக வந்துருக்கு.
வில்லன்களை புரட்டி எடுக்கும் போது செம தீம் சாங்காக இந்த பாடல், தியேட்டரில் தெறிக்கவிடும் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
அனிருத் செல்லத்தை தூக்கிக் கொண்டாடுங்கடா என விஜய் ரசிகர்கள் வாத்தி ரெய்டு பாடலை கேட்டு கொண்டாடி வருகின்றனர்.
வாத்தி ரெய்டு
முன்னாடியே ஸ்க்ரிப்ட்ல இருந்துச்சா, இல்லை லேட்டஸ்ட்டா லோகேஷ் கனகராஜ் இணைச்சிருக்காரான்னே ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பக்காவாக மாஸ்டர் படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் அதிரடி சரவெடியாக இருக்கிறது. திடுதிப்புனா வந்தாதான ரெய்டு என்பது போல ரசிகர்கள் எதிர்பார்க்காமல், அப்டேட் கேட்காமல் இருக்கும் போது இறங்கி இருக்கிறது வாத்தி ரெய்டு.

யார் எழுதியிருக்கா?
அனிருத் இசையில் மூன்றாவது சிங்கிளாக உருவாகி உள்ள வாத்தி ரெய்டு பாடலை அறிவு எழுதி பாடியிருக்கிறார். மூச்சு விடாமல் வாத்தி ரெய்டு பாடலை பாடி, கடைசியில் ஒரு இடத்தில் மூச்சு விடும் விதம் எல்லாம் ரசிகர்களை ஒவ்வொரு முறை கேட்கும் போது ரசிக்க வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

எது பெஸ்ட்?
லோகேஷ் கனகராஜின் பிறந்த நாள் ட்ரீட்டாக வெளியாகியுள்ள வாத்தி ரெய்டு சூப்பரா இருக்கா? குட்டி ஸ்டோரி சூப்பரா இருக்கா? அல்லது வாத்தி கம்மிங் ஒத்து பாட்டு சூப்பரா இருக்கா என்று கேட்டால், மூன்றும் மூன்று ரகத்தில், சினிமா ரசிகர்களை மிரட்டுகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

யார் தொகுத்து வழங்குறா?
சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலான லீலா பேலஸில் நாளை மாஸ்டர் ஆடியோ லாஞ்ச் நடைபெறவிருக்கிறது. பிகில் இசை வெளியீட்டு விழாவை விஜே ரம்யா தொகுத்து வழங்கிய நிலையில், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவை விஜே பவானா மற்றும் மிர்ச்சி விஜய் இணைந்து தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சிம்ரன் டான்ஸ்
மேலும், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில், நடிகர் விஜய்யின் ஃபேவரைட் ஜோடியான நடிகை சிம்ரன், ஸ்பெஷல் டான்ஸ் ஆட உள்ளார் என்ற தகவலும், நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து வெளியாகி உள்ளது. மாஸ்டர் படத்தின் 3வது சிங்கிளிலேயே ரெய்டு குறித்த பாடல் வெளியாகி உள்ள நிலையில், நாளை விஜய் எப்படி மிரட்டப்போகிறார் என்பதை காண அனைவருமே ஆர்வமுடன் இருக்கின்றனர்.

அடங்கும் அரசமரம்
என்னடா வாத்தி ரெய்டு பாட்டுல, எந்தவொரு சர்ச்சையான வார்த்தைகளும் இல்லையே என்று பார்த்தால், வேகமாக செல்லும் பாடலின் நடுவே அடங்கும் அரசமரம் என்ற அட்டாக் செய்யும் வரி ஒன்று இடம் பிடித்திருக்கிறது. இதை யார் வேணா எப்படி வேணா எடுத்துக்கட்டும், நிச்சயம் வாத்தி ரெய்டு பாட்டு, ரசிகர்களுக்கு பக்கெட் பிரியாணி தான்.


Click it and Unblock the Notifications











