கண்டிப்பா ரசிகர்கள் சாமியாட போறாங்க.. விஜய் மற்றும் விஜய்சேதுபதி மிரட்டும் மாஸ்டர் 6வது புரமோ இதோ!

சென்னை: தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி என டைட்டில் வரும் போதே ஒரு கூஸ்பம்ப்ஸ் ரசிகர்களுக்கு ஆட்டோமேட்டிக்கா வருவதை யாரும் தவிர்க்க முடியாது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் வரும் ஜனவரி 13ம் தேதி திரைக்கு வருகிறது.

தினமும் ஒரு புரமோவை வெளியிட்டு புரமோஷன் செய்து வரும் படக்குழு இன்று 6வது புரமோவை வெளியிட்டுள்ளனர்.

இன்னும் 3 நாட்கள்

இன்னும் 3 நாட்கள்

மாஸ்டர் படம் இன்னும் 3 நாட்களில் திரையில் ரிலீசாக உள்ளது. 50 சதவீதம் மட்டுமே இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், ரோகிணி திரையரங்கில் டிக்கெட்டுக்காக ரசிகர்கள் கூட்டமாக அலைமோதிய காட்சிகள் பதை பதைக்க வைக்கிறது. தியேட்டரில் டிக்கெட்டை கொடுக்கும் முறையை தவிர்த்து, ஆன்லைன் டிக்கெட் மட்டுமே இந்த கொரோனா காலத்தில் கொடுத்து இருக்கலாம்.

பொளக்கட்டும் பற பற

பொளக்கட்டும் பற பற

வாத்தி கம்மிங்கில் ஆரம்பித்து, வாத்தி ரெய்டு, விஜய் வசனம், ரொமான்ஸ் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான புரமோக்களை வெளியிட்டு தளபதி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது மாஸ்டர் படக்குழு. எத்தனை தடைகள் வந்தாலும், திட்டமிட்டபடி வரும் ஜனவரி 13ம் தேதி மாஸ்டர் திரைக்கு வரும் என உறுதியாகி உள்ளது. தற்போது 6வது புரமோ வெளியாகி உள்ளது.

ரெண்டுபேருமே பொளக்குறாங்க

ரெண்டுபேருமே பொளக்குறாங்க

ஒரு பக்கம் விஜய் ரவுண்டி கட்டி அடித்தால், மறுபக்கம் விஜய்சேதுபதி வெறித்தனமாக அடித்து துவம்சம் பண்ணும் காட்சிகளை இந்த புரமோவில் காட்டியுள்ளனர். விஜய் படம் என்பதற்காக விஜய்சேதுபதியை டம்மியாக்காமல், வெயிட்டான வில்லத்தன ரோலை வடிவமைத்த இடத்திலேயே லோகேஷ் சிக்ஸர் அடித்துள்ளார்.

மொரட்டு பவானி

மொரட்டு பவானி

பேட்ட படத்தில் விஜய்சேதுபதியை மொக்கை பண்ணிட்டார் கார்த்திக் சுப்புராஜ் என்கிற விமர்சனம் வைக்கப்பட்டது. அதை நிச்சயம் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தில் பண்ணவில்லை என்றே அவர் கொடுக்கும் பேட்டிகளை பார்த்தால் தெரிகிறது. மொரட்டு வில்லன் பவானியாகவே விஜய்சேதுபதியின் ரோல் செதுக்கப்பட்டு இருக்கிறதாம்.

தியேட்டர்கள் தெறிக்கும்

தியேட்டர்கள் தெறிக்கும்

பிகில், கைதி படங்களுக்கு பிறகு தியேட்டரில் பெரிதாக மக்கள் கூட்டம் செல்லவே இல்லை. இந்நிலையில், வரும் பொங்கலுக்கு மாஸ்டர் படம் வெளியாகவுள்ள நிலையில், தளபதி ரசிகர்கள் மற்றும் மக்கள் செல்வன் ரசிகர்கள் திரையரங்குகளை தெறிக்கவிடுவது நிச்சயம். கொரோனா காலம் என்பதால், அதையும் மனதில் வைத்து சேஃப்ட்டியாக மாஸ்டரை பார்த்து இந்த பொங்கலை கொண்டாடுங்கள் என்பதே பலரது வேண்டுகோள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X