அந்த ஏரியாவுல அய்யா கில்லி டா.. மாஸ்டரில் காத்திருக்கும் சூப்பர் சர்ப்ரைஸ்.. வைரலாகும் கபடி புரமோ!

சென்னை: மாஸ்டர் படத்தின் ஒரு மணி நேர காட்சிகள் லீக் ஆனாலும், தியேட்டரில் தெறிக்க போகும் கொண்டாட்டத்தை யாராலும் தடுக்க முடியாது.

வழக்கமாக தியேட்டரில் படம் வெளியாகி முதல் ஷோ முடிந்ததுமே பைரசியின் கோர முகம் தலைவிரித்தாடும்.

விமர்சகர்கள் விஜய் படம் என்றாலே கிழித்துத் தொங்கவிடுவார்கள். ஆனால், அதையெல்லாம் தாண்டி 300 கோடி பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் கொடுக்கும் கில்லி தான் விஜய் என்பது நாளை முதல் மீண்டும் நிரூபிக்கப்படும்.

விஜய் படம் என்றாலே

விஜய் படம் என்றாலே

விஜய் படம் என்றாலே ஏதாவது சிக்கல் ரிலீஸ் நேரத்தில் ஏற்படுவது வழக்கமாகி விட்டது. பெரிய பட்ஜெட் படங்கள், பெரிய நடிகர்களின் படங்களுக்கு வழக்கமாக ஏற்படும் பைரசி பாதிப்பு, இந்த முறை மாஸ்டருக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கிட்டத்தட்ட ஒரு மணி நேர காட்சிகள் கசிந்து படக்குழுவை மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கைகோர்த்த அஜித் ரசிகர்கள்

கைகோர்த்த அஜித் ரசிகர்கள்

விஜய் படத்திற்கு இப்படி ஒரு விஷயம் நேர்ந்து விட்டதே என்று சந்தோஷப்படாமல், திருட்டுத் தனமாக லீக் ஆன மாஸ்டர் படத்தின் லீக் காட்சிகளை ரிப்போர்ட் செய்யுங்கள், ஷேர் செய்யாமல் ஒற்றுமையோடு கைகோர்த்து பைரசியை ஒழிக்க போராடுங்கள் என சமூக வலைதளத்தில் ஆதரவு கொடுத்து வருவது சூப்பரான விஷயம். எதிர்காலத்திலும் இது தொடர வேண்டும்.

கில்லி சர்ப்ரைஸ்

கில்லி சர்ப்ரைஸ்

சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்குச் செல்லும் மாஸ்டர் விஜய்யிடம், அங்கே இருக்கும் அர்ஜுன் தாஸ், கோட்டை கிழிடா, யோவ் வாத்தி இந்த ஆட்டத்தோட பெயராவது தெரியுமா என கேட்க, கில்லி படத்தின் பிஜிஎம்முடன் விஜய் களமிறங்கி கபடியில் கலக்கும் அதிரடி புரமோ டிரெண்டாகி வருகிறது.

கில்லி டா

கில்லி டா

17 வருஷத்துக்கு முன்னாடி ரிலீசான கில்லி படத்தில் வித்யாசகர் போட்ட மாஸ் பிஜிஎம் ஆன கபடி கபடி பிஜிஎம்மை, ராக்ஸ்டார் அனிருத், அப்படியே ரீ-மாஸ்டரிங் செய்து இந்த ஒரு காட்சிக்காக போட்டுள்ளது ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் கொடுத்துள்ளது. தியேட்டரில் நிச்சயம் நாளை கொண்டாட்டம் களைகட்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X