செல்வராகவன் படமான மாஸ்டர்.. அந்த “கண்பேசும் வார்த்தைகள்” பாட்டு அப்படியே செட் ஆகுதே!
சென்னை: மீம் கிரியேட்டர்களுக்கும் நெட்டிசன்களுக்கும் மாஸ்டர் திரைப்படம் தான் சரியான தீனியாக அமைந்துள்ளது.
ஒரு வெற்றி படத்தை ட்ரோல் செய்தாலும், அதை வைத்து வேறு விதமாக எடிட் செய்து போட்டாலும் அதன் ரீச் வேற லெவலில் தான் இருக்கும்.
அதே நிலைமை தான் தற்போது மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை செல்வராகவன் பட பாடலுடன் மிக்ஸ் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

இரட்டை குதிரை
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரி 13ம் தேதி திரைக்கு வந்தது. திரைக்கு வந்து 16 நாட்களே ஆன நிலையில் அமேசான் பிரைமிலும் வெளியாகி உள்ளது மாஸ்டர். தியேட்டர் மற்றும் ஒடிடி என இரட்டை குதிரையில் சவாரி செய்கிறது.

அவங்களே சிரிச்சிட்டாங்க
சமூக வலைதளத்தில் குவியும் ட்ரோல் மீம்களால் பல பிரபலங்களும் கடுப்பாவார்கள். மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் பண்ண ஒரு பெர்ஃபார்மன்ஸை பிரஷ் பண்ணுவது, சிக்கன் கடிப்பது, லேஸ் பாக்கெட் பிரிப்பது, பபுள் கம் விடுவது, டிபன் பாக்ஸ் திறப்பது என வச்சு செய்ததை பார்த்து மாளவிகா மோகனனே விழுந்து விழுந்து சிரித்து கமெண்ட்டும் போட்டுள்ளார்.

செல்வராகவன் படம்
இந்நிலையில், மாஸ்டர் படத்தை செல்வராகவன் படம் என ஒரு வீடியோ எடிட்டுடன் சில நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் மாஸ்டர் படம் குறித்த ஆராய்ச்சி மற்றும் ட்ரோல்கள் என சமூக வலைதளம் நகைச்சுவைக்கு பஞ்சமே இல்லாமல் நகர்ந்து கொண்டே போகிறது.
கண் பேசும் வார்த்தைகள்
மாஸ்டர் படத்தின் கடைசி பாடலான பொளக்கட்டும் பற பற பாடலில் விஜய்சேதுபதி ஆடும் நடனத்தை ஸ்லோ மோஷனில் எடிட் செய்து அதற்கு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி படத்தின் கண் பேசும் வார்த்தைகள் பாடலை மேட்ச் செய்து வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











