கார்த்தியின் சர்தார் படத்தில் இணைந்த மாஸ்டர் பிரபலம்... தெறிக்கும் அப்டேட்!

சென்னை : சுல்தான் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தி அடுத்து நடிக்கும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகி இணையதளத்தில் வைரலாகிக் கொண்டுள்ளது.

தான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்தையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் கார்த்தி இப்போது இயக்குனர் பி. எஸ். மித்ரன் உடன் கைகோர்த்துள்ளார்.

சர்தார் படத்தை பற்றிய சுவாரசியமான பல தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்க லேட்டஸ்ட் அப்டேட்டாக இதில் மாஸ்டர் பிரபலம் ஒருவர் இணைந்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.

வசூல் சாதனை

வசூல் சாதனை

கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் கடந்த பொங்கலன்று மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகி பட்டையை கிளப்பி இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல நாடுகளில் வசூல் சாதனையை செய்தது. இதில் இடம்பெற்றிருந்த பெரும்பாலான வசனங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தது . மாஸ்டர் திரைப்படத்தில் வசனகர்த்தாவாக பிரபல எழுத்தாளர் பொன் பார்த்திபன் பணியாற்றியிருந்தார்.

வசனம் எழுதி வந்தார்

வசனம் எழுதி வந்தார்

ஆரம்பத்தில் இயக்குனர் ஹரியுடன் இணைந்து பல திரைப்படங்களில் பணியாற்றிய பொன் பார்த்திபன் இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் வெளியான உப்பு கருவாடு மூலம் முதல்முறையாக வசனகர்த்தாவாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பிருந்தாவனம், காற்றின் மொழி என வரிசையாக ராதாமோகன் இயக்கிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதி வந்தார்.

இவரது வசனங்கள்

இவரது வசனங்கள்

இப்போது முன்னணி நடிகர்களின் படங்களில் பெரும் பங்காற்றி வரும் பொன் பார்த்திபன் ஹீரோ, கைதி உள்ளிட்ட திரைப்படங்களில் தன்னுடைய வசனத்தின் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்க சமீபத்தில் விஜய் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற மாஸ்டரில் இவரது வசனங்கள் திரையரங்குகளில் ரசிகர்களின் விசில் சத்தத்துடன் தெறிக்க விட்டது.

இக்கடலில் அடியேனும் ஒரு துளி

இக்கடலில் அடியேனும் ஒரு துளி

இவ்வாறு மாஸ் நடிகர்களின் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய பக்க பலமாக இவரது வசனங்கள் இருந்து வர நடிகர் கார்த்தி, இயக்குனர் பி.எஸ் மித்ரன் முதல்முறையாக இணையும் "சர்தார்" படத்திலும் வசனம் எழுத ஒப்பந்தமாகியுள்ளார். இதை உறுதிப்படுத்தும் விதமாக தன்னுடைய முகப்புத்தகத்தில் சர்தார் மோஷன் போஸ்டர் லிங்க்கை ஷேர் செய்து "இக்கடலில் அடியேனும் ஒரு துளி" என்று பதிவிட்டுள்ளார்.

உச்சகட்ட எதிர்பார்ப்பை

உச்சகட்ட எதிர்பார்ப்பை

ஏற்கனவே பி.எஸ் மித்ரன் உடன் இணைந்து ஹீரோ திரைப்படத்திற்கு இவர் வசனம் எழுதியுள்ள நிலையில் இரண்டாவது முறையாக இந்த வெற்றிக் கூட்டணி சர்தார் திரைப்படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களையே உச்சகட்ட எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. மேலும் பொன் பார்த்திபன் விரைவில் திரைப்படம் ஒன்றை இயக்கி இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X