பாராட்டு மழையில் நனைந்த மாஸ்டர் மகேந்திரன்... நீண்ட வருட உழைப்புக்கு கிடைத்த வெற்றி!

சென்னை : 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் அனைவரும் விரும்பும் நடிகராக இருந்து வருபவர் நடிகர் மாஸ்டர் மகேந்திரன்.

பல ஆண்டுகளாக குழந்தை நட்சத்திரமாக நடித்து இப்பொழுது திரைப்படங்களில் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் மகேந்திரன் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் குட்டி பவானியாக நடித்து கலக்கி இருப்பார்.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக திரைத்துறையில் இருந்தாலும் ஹீரோவாக தனி இடத்தை பிடிக்க முடியாமல் போராடிக்கொண்டிருந்த மகேந்திரன் மாஸ்டர் திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வர சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் இவரை ஓயாமல் பாராட்டி தீர்த்து வருகின்றனர்.

தாய்குலமே தாய்குலமே

தாய்குலமே தாய்குலமே

தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட குழந்தை நட்சத்திரங்களில் கண்டிப்பாக நடிகர் மகேந்திரனுக்கு முதலிடம் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அத்துடன் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 6-க்கும் மேற்பட்ட மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கலக்கி இருக்க தாய்குலமே தாய்குலமே மற்றும் கும்பகோணம் கோபாலு ஆகிய படங்களுக்காக சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதை பெற்றுள்ளார்.

பாண்டியராஜனுக்கு மகனாக

பாண்டியராஜனுக்கு மகனாக

குறிப்பாக நாட்டாமை திரைப்படத்தில் பஞ்சாயத்தில் சாட்சி சொல்லும் சிறுவனாக வந்து அவரையும் கவர்ந்த இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்திருந்தாலும் இயக்குனரும் நடிகருமான பாண்டியராஜனுக்கு மகனாக பல படங்களில் நடித்து அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்று ஹீரோக்களுக்கு இணையாக இவருக்கு மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

போராடிக் கொண்டிருக்கிறார்

போராடிக் கொண்டிருக்கிறார்

குழந்தை நட்சத்திரமாக அசத்தி வந்த மகேந்திரன் கதாநாயகனாகவும் கலக்குவார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் விழா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். படம் சுமாரான வெற்றியை பெற்றிருந்தாலும் மகேந்திரனின் நடிப்பு ரசிகர்களிடம் கவனத்தைப் பெறவில்லை. குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த மகேந்திரன் இப்பொழுது ஹீரோவாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க போராடிக் கொண்டிருக்கிறார்.

மிரட்டலான நடிப்பை

மிரட்டலான நடிப்பை

விழா திரைப்படத்தை தொடர்ந்து விந்தை, விரைவில் இசை, திட்டிவாசல், நாடோடி கனவு, நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு என பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் இன்றுவரை ரசிகர்களால் கவனிக்கப்படாமல் போராடிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் வெளியான விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் சிறுவயது பவானி கதாபாத்திரத்தில் நடித்து நடிப்பில் பட்டையைக் கிளப்பி இருக்கும் மகேந்திரனின் மிரட்டலான நடிப்பை பார்த்துவிட்டு ரசிகர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர்.

நடிப்பை பாராட்டி

நடிப்பை பாராட்டி

மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு எந்த அளவுக்கு பேசப்பட்டதோ அதே அளவுக்கு மகேந்திரனின் மிரட்டலான நடிப்பும் அனைவரையும் கவர்ந்திருந்த நிலையில் சமூக வலைதளங்களில் இவரின் நடிப்பை பாராட்டி எக்கச்சக்கமான மீம்ஸ்கள் பறந்து வர தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய நடிகர்களின் பட்டியலில் இப்போது மகேந்திரனும் இணைந்துள்ளார். வாழ்த்துக்கள் மகேந்திரன் நீண்ட நாள் உழைப்புக்கும் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி இது தொடர்ந்து கலக்குங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X