எல்லா தல ரசிகர்களும் அப்படி இல்லை.. சிலர் இப்படி கேவலமா பண்றானுங்க.. விளாசிய மாஸ்டர் நடிகர்!

சென்னை: மாஸ்டர் செகண்ட் சிங்கிளான 'வாத்தி கம்மிங்' இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

அதுகுறித்த ட்வீட் ஒன்றை போட்ட நடிகர் ஷாந்தனுவின் ட்வீட்டுக்கு கீழே, விஜய் ஹேட்டர் ஒருவர், மிகவும் மோசமாக கமெண்ட் செய்து இருந்தார்.

அதற்கு தனது ஸ்டைலில், ரொம்ப நாசுக்காக நடிகர் ஷாந்தனு போட்ட கமெண்ட், தளபதி விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

வாத்தி கம்மிங்

தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான வாத்தி கம்மிங் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. குட்டி ஸ்டோரி பாடல், தத்துவம் கலந்த பாடலாக வெளியாகி வைரலான, நிலையில், ரசிகர்களுக்கான தர லோக்கல் குத்து பாடலாக இந்த பாடல் இருக்கும் என்றும், விஜய் பயங்கரமா டான்ஸ் ஆடியுள்ளார் என்றும் நடிகர் ஷாந்தனு ட்வீட் போட்டிருந்தார்.

வாந்தி கம்மிங்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் ஷாந்தனு, போட்ட ட்வீட்டுக்கு கீழே, விஜய் ஹேட்டர் ஒருவர், வாந்தி கம்மிங்னு படிச்சுட்டேன் என மிகவும் மோசமாக கமெண்ட் செய்திருந்தார். இதை பார்த்து அப்செட் ஆன ஷாந்தனு அவருக்கு கமெண்ட்டில் பதிலடி கொடுத்தார்.

ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கீங்க

'வாந்தி கம்மிங்' என்ற மோசமன கமெண்ட்டை பார்த்து கோபம் அடைந்த நடிகர் ஷாந்தனு, தனது ஸ்டைலில் மிகவும் நாசுக்காக, "நான் நினைக்கிறேன்.. உங்க வாழ்க்கையில ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கீங்க போல" என பதிலடி கமெண்ட் கொடுத்துள்ளார். அவரது கமெண்ட்டை பார்த்ததும் விஜய் ரசிகர்கள் உடனடியாக ஆஜர் ஆகிவிட்டனர்.

அவங்களே அப்படித்தான்

அஜித் ரசிகர்கள் என்றாலே அப்படித்தான்.. அவனை கண்டுகாம அப்படியே விட்டுடுங்க ப்ரோ என விஜய் ரசிகர் ஒருவர், வரிந்துக் கட்டிக் கொண்டு கமெண்ட் போட, அவருக்கும் கூலாக நடிகர் ஷாந்தனு ரிப்ளை கொடுத்துள்ளது, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

எல்லா தல ரசிகர்களும்

தொடர்ச்சியாக விஜய் ரசிகர்கள், அந்த ஹேட்டரை திட்டி தீர்க்க, சிலர், அஜித் ரசிகர்கள் என்றாலே அப்படித்தான் எனக் கூறினர். அந்த கமெண்ட்டை பார்த்த ஷாந்தனு, எல்லா தல ரசிகர்களும் அப்படி இல்லை. ரசிகர்கள் என்ற போர்வையில் இருக்கும் சிலர் தான் இப்படி கீழ்த்தரமாக நடந்து கொண்டு நடிகர்கள் மற்றும் நடிகர்களின் ரசிகர்களின் பெயரை கெடுத்து வருகிறார்கள் என்று அதிரடியாக கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X