Just In
- 4 hrs ago
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- 5 hrs ago
லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
- 5 hrs ago
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி!
- 5 hrs ago
குப்புறப்படுத்து தீவிர யோசனை.. என்ன ஆச்சு குமுதா.. ஏன் இவ்வளோ சோகம் !
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Automobiles
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பஞ்சாயத்து பண்ண வரல.. ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க.. ரசிகர்கள் சண்டைக்கு நடுவே சிக்கிய சாந்தனு!
சென்னை: நடிகர் அஜித் பிறந்தநாள் வரும் மே 1ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சமூக வலைதளத்தில் அஜித், விஜய் ரசிகர்கள் மோதிக் கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
அடிக்கடி ட்விட்டரில் மோதிக் கொள்ளும் ரசிகர்கள் சில காலம், தங்களின் சண்டையை தவிர்த்து வந்தனர்.
இந்நிலையில், மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கணக்காக விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் மோதிக் கொள்ள அந்த சண்டைக்கு நடுவே நடிகர் சாந்தனு சிக்கிக் கொண்டுள்ளார்.
ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்குவேன்.. 2021ல் நான் முதல்வராவது உறுதி.. நடிகையால் காண்டான நெட்டிசன்ஸ்!

மாஸ்டர் படத்தில்
தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கியமான ரோலில் நடிகர் சாந்தனு நடித்து வருகிறார். மாஸ்டர் படம் தனக்கும் செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்து வைக்கும் என மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் உணர்ச்சிகரமாக பேசி இருந்தார். மாஸ்டர் படத்தின் அப்டேட்களையும் அவ்வப்போது ரசிகர்களுக்கு வழங்கி வந்தார்.

ரசிகர்கள் சண்டை
கடந்த இரு நாட்களாகவே ட்விட்டரில் மீண்டும் அநாகரிகமற்ற முறையில் விஜய் - அஜித் ரசிகர்கள் சண்டையிட்டு வருகின்றனர். கோலிவுட்டின் இரண்டு மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் நடிகர்களையும் ரசிகர்கள் மாற்றி மாற்றி ட்ரோல் செய்தும் ஆபாசமாக சித்தரித்தும் சண்டையிட்டு வருகின்றனர்.
|
நெகட்டிவ் டேக் வேண்டாம்
விஜய், அஜித் ரசிகர்களின் சண்டைக்கு நடுவே, நடிகர் சாந்தனுவிடம் சில அஜித் ரசிகர்கள், உங்க தளபதி ரசிகர்களும் தான் நெகட்டிவ் டேக் டிரெண்ட் பண்ணி ஆபாசமான ட்வீட்களையும், கெட்ட வார்த்தைகளால் அஜித்தையும் திட்டுகின்றனர் என்றனர். அந்த கமெண்ட்டை பார்த்து டென்ஷனான சாந்தனு, அஜித், விஜய் ரசிகர்கள் என இரு தரப்பும் இப்படி செய்வது நல்லது அல்ல, நெகட்டிவ் டேக் போடாதீங்க என கேட்டுக் கொண்டார்.
|
பஞ்சாயத்துக்கு வரல
ஆனால், நடிகர் சாந்தனுவின் பேச்சை விஜய் ரசிகர்களோ, அஜித் ரசிகர்களோ கொஞ்சமும் காது கொடுத்து கேட்பதாக தெரியவில்லை. அவங்கதான் முதலில் ஆரம்பித்தார்கள் என்றும், அவர்கள் தான் முதலில் திட்டினார்கள் என்றும் பிரச்சனையை வளர்த்துக் கொண்டே சென்றனர். இந்நிலையில், கடுப்பான சாந்தனு, நான் இங்கே பஞ்சாயத்து பண்ண வரல, எனக்கு அது வேலையும் இல்லை, தயவு செஞ்சு இரு தரப்பும் இந்த பிரச்சனையை நிறுத்துங்க ப்ளீஸ் என கேட்டுக் கொண்டுள்ளார்.
|
நடுவுல சிக்கிடாதீங்க
தல - தளபதி ரசிகர்கள் சண்டையை தீர்த்து வைக்க நடிகர் சாந்தனு எடுத்து வரும் பல முயற்சிகளை ரசிகர்கள் மதிப்பதில்லை. நண்பர் அஜித் என தளபதி விஜய்யும், ஒருத்தர் மேல காட்டுற விஸ்வாசத்துக்காக மற்றவரை குறை சொல்லக் கூடாது என அஜித்தும் சொல்லியே கேட்காதவர்கள் இவங்க என சில நியூட்ரல் ரசிகர்கள் சாந்தனு நீங்க நடுவுல வந்து சிக்கிடாதீங்க என்றும் அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.