2020ன் பெரிய படம் மாஸ்டர்.. லோகேஷ் கனகராஜ் டைரக்ஷன் வேற லெவல்.. சந்தோஷத்தில் ஆண்ட்ரியா!
Recommended Video
சென்னை: மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் செட்டில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு நடிகை ஆண்ட்ரியா வைரலாக்கியுள்ளார்.
சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பவர்ஃபுல் ரோல்
மாஸ்டர் படத்தில் அழகு சிலைகளாக மட்டுமின்றி நாயகிகளுக்கும் பவர்ஃபுல்லான ரோல்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயின்று வரும் நிலையில், ஆண்ட்ரியாவும் தீவிர ஜிம் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
மாஸ்டர் செட்
2020ம் ஆண்டின் மிகப்பெரிய படமாக தளபதி விஜய்யின் மாஸ்டர் உருவாகி வருவதாகவும், இந்த படத்தில் தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கும் லோகேஷ் கனகராஜ் போன்ற ஒரு டேலன்ட்டான இயக்குநருடன் ஒர்க் செய்வதில் மகிழ்ச்சி என ஆண்ட்ரியா செட்டில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
ஷூட் முடியப்போகுது
மாஸ்டர் படம் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதாகவும், இறுதிக்கட்ட படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதத்துடன் முடிவடைய உள்ளதாகவும், அதற்காக மாஸ்டர் பட இயக்குநர் தயாராகி வருகிறார் என நடிகை ஆண்ட்ரியா குறிப்பிட்டுள்ளார்.

தளபதி ரசிகர்கள் குஷி
மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் டயலாக் பேப்பருடன் ஆண்ட்ரியா இருக்கும் புகைப்படத்தை பார்த்த தளபதி ரசிகர்கள் பயங்கர குஷியாகி உள்ளனர். மேலும், மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் நிறைவடைய உள்ளதால், டீசர், டிரைலர் என பல கொண்டாட்டங்கள் வரும் என்ற உற்சாகத்தில் இருக்கின்றனர்.

வாழ்த்துக்கள்
மேலும், தளபதி விஜய் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஆண்ட்ரியாவை தளபதி ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பான ஆண்டாக அமையும் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

200 கோடி
மாஸ்டர் படத்தின் ஷூட்டிங்கே முடியாத நிலையில், ப்ரீ ரிலீஸ் பிசினஸ் 200 கோடியை கடந்துள்ளது என்ற தகவல் சமீபத்தில் வெளியாகி தளபதி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

சக்ராசனா
நடிகை ஆண்ட்ரியாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று சக்ராசனா செய்யும் புகைப்படத்தை பதிவிட்டு மாஸ்டர் அப்டேட்களை தொடர்ந்து தளபதி ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார்.

அரண்மனை 3
மாஸ்டர் படத்தை முடித்த கையுடன் மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 3ம் பாகத்தில் ஆண்ட்ரியா நடிக்கவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, சுந்தர்.சி, பூனம் பஜ்வா மற்றும் ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கியமான ரோல்களில் நடிக்கவுள்ளனர்.


Click it and Unblock the Notifications











