அஜித் ரசிகர்களுக்கு குட் நியூஸ்...மாஸ்டர் நடிகை வெளியிட்ட வலிமை லேட்டஸ்ட் அப்டேட்

சென்னை : கொரோனா நெருக்கடிக்கு பிறகு தியேட்டரில் வெளியிடப்பட்ட படங்களில் ஹிட் கொடுத்த படம் என்றால் அது விஜய் நடிப்பில் வெளி வந்த மாஸ்டர் தான். தியேட்டர்களில் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கே அனுமதி என்ற நிலையிலும் அதிகமானவர்களை தியேட்டருக்கு வரவழைத்த படம் இது.

லோக்கேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம், ரிலீஸ் ஆவதற்கு முன்பே பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி, பல சாதனைகளை படைத்து விட்டன. ஜனவரி 13 ம் தேதி பொங்கல் விருந்தாக இப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது.

விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு பாக்கியராஜ், ஆண்டிரியா என இப்படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவரின் கேரக்டரும் ரசிகர்கள் மனதை பெரிதும் கவர்ந்துள்ளது. விஜய்க்கு இணையாக விஜய் சேதுபதியின் நடிப்பும் பாராட்டப்பட்டு வருகிறது.

ஒரு அப்டேட் கூட இல்லை :

ஒரு அப்டேட் கூட இல்லை :

விஜய் நடித்த மாஸ்டர் படம் தியேட்டரில் ரிலீசாகி, இப்போது ஓடிடி.,யிலும் வெளியிடப்பட்டு விட்டது. ஆனால் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு துவங்கி ஓராண்டுக்கும் மேல் ஆகிறது. இதுவரை படத்தின் பஸ்ட்லுக், அப்டேட் எதுவும் வெளியிடப்படவில்லை. இது அஜித் ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

முதல்வரிடம் அப்டேட் கேட்ட ரசிகர்கள் :

முதல்வரிடம் அப்டேட் கேட்ட ரசிகர்கள் :

இதனால் பொறுமை இழந்த அஜித் ரசிகர்கள், சமீபத்தில் பிரச்சாரம் ஒன்றில் பங்கேற்பதற்காக காரில் சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் காரை சூழ்ந்துள்ளனர். பிறகு அஜித்தின் வலிமை பட அப்டேட் பற்றி கேட்டு முழக்கமிட்டுள்ள வீடியோ வைரலானது.

நான் சொல்றேன் :

நான் சொல்றேன் :

இதற்கிடையில் மாஸ்டர் படத்தில் பல் டாக்டர் வேடத்தில் நடித்த நடிகை சங்கீதா, வலிமை படம் பற்றிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார். மாஸ்டர் படத்திற்கு அடுத்து எந்தெந்த படங்களில் நடிக்கிறீர்கள் என கேட்டதற்கு, வலிமை படம் பற்றிய ரகசியங்களை போட்டு உடைத்துள்ளார்.

அப்படி என்ன தான் சொன்னார் :

அப்படி என்ன தான் சொன்னார் :

சங்கீதா தனது பேட்டியில், வலிமை படத்தில் நானும் ஒரு சின்ன ரோலில் நடித்துள்ளேன். என்ன ரோல் என இப்போது சொல்ல முடியாது. வலிமை படத்தின் வேலைகள் 99 சதவீதம் முடிவடைந்து னிட்டன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றார்.

இது போதுமே :

இது போதுமே :

வலிமை படம் பற்றி ஏதும் தெரியாமல் இருந்த நிலையில், தற்போது 99 சதவீதம் பணிகள் முடிந்து விட்டதாக சங்கீதா கூறி இருப்பது கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்படியானால் வெகு விரைவில் வலிமை பற்றி அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள் வரலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X