மாஸ்டர் நாயகி.. நம்ம மாளவிகா மோகனனுக்கு அப்படியொரு ரோல்ல நடிக்கணுமா? ரவுடி பேபியா இருப்பாங்களோ!
சென்னை: மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன் அதிரடி ஆக்ஷனில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என தனது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.
வரும் பொங்கலுக்கு ரிலீசாகவுள்ள தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார் மாளவிகா மோகனன்.
மலையாள நடிகையான மாளவிகா மோகனன் சூப்பர்ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

வாத்தியாரம்மா
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் குடிக்கு அடிமையான வாத்தியாராக ஜேடி கதாபாத்திரத்தில் விஜய் நடித்துள்ளார். அவரை திருத்தி மாற்றப் போகும் வாத்தியாரம்மாவாக மாளவிகா மோகனன் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவரது கதாபாத்திரமும் கதைக்கு வலு சேர்க்கும் என்று கூறப்படுகிறது.

ஆக்ஷன் இல்லை
ஆனால், மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனனுக்கு எந்தவொரு ஆக்ஷன் காட்சிகளும் இல்லை என சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். முன்னதாக மாஸ்டர் படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் எல்லாம் கற்றார் என்றும், அவருக்கு போலீஸ் கதாபாத்திரம் இருக்கும் என்றும் வதந்திகள் வெளியான நிலையில், அதையெல்லாம் மறுத்துள்ளார்.

கில் பில்
ஆனால், ஆக்ஷன் படத்தில் நடிக்க தனக்கு ஆசை இருப்பதாகவும், ஹாலிவுட்டில் குவன்டின் டரன்டினோ இயக்கத்தில் வெளியான கில் பில் மாதிரி ஒரு படத்தில் ஹாலிவுட் நடிகை உமா தர்மன் நடித்த ரோல் போல ஒரு ரோலில் நடித்து பட்டையை கிளப்ப வேண்டும் என்பதே இவரது கனவாம்.

சீக்கிரமே சண்டை படம்
முழுக்க முழுக்க நாயகியை மையப்படுத்திய கதையில் விரைவிலே நடிக்க ரெடியாகி வருகிறார் மாளவிகா மோகனன். நல்ல திரைக்கதை அமைந்தால், உடனடியாக ஒரு உமன் சென்ட்ரிக் படத்தை களமிறக்கி ஆக்ஷன் காட்சிகளில் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு நடித்து மிரட்ட உள்ளாராம்.

தனுஷுக்கு ஜோடியாக
மாஃபியா படத்தைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகவுள்ள டி43 படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியது. நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் அந்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் ஷூட்டிங் ஸ்டார்ட் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











