மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன்.. அடுத்து இந்த ஹீரோவுக்குத்தான் ஜோடியாம்.. இது செம ஸ்டோரியால இருக்கு!

சென்னை: மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் முடிவடைய உள்ள நிலையில், தளபதி 65 படத்தை சுதா கொங்கரா இயக்கப் போகிறார் என்ற தகவல்கள் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில், மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள, மாளவிகா மோகனன் அடுத்ததாக நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்ற தகவலும் கசிந்துள்ளது.

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாக உள்ள கார்த்தியின் படத்துக்கு மாஸ்டர் நாயகி தான் ஜோடியாம்.

மாஸ்டர் நாயகி

மாஸ்டர் நாயகி

டோலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன், ரஜினிகாந்தின் பேட்ட படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். போல்டான ஹீரோயினை தேடி வந்த மாஸ்டர் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியா நடிக்கிறீங்களா, எனக் கேட்கவும் உடனடியாக ஓகே சொல்லியுள்ளார்.

ஆக்‌ஷனும் இருக்கு

ஆக்‌ஷனும் இருக்கு

மாளவிகா மோகனை நாயகியாக தேர்வு செய்ததற்கு காரணமே, இந்த படத்தில், ரொமான்ஸ் செய்ய மட்டுமல்ல, ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி காட்டவும் தான். இந்த படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைகளையும் மாளவிகா மோகனன் 2 மாதங்கள் பயிற்சி செய்துள்ளார் என்ற தகவல்கள், சமீபத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மாடலிங்கில் ஆர்வம்

மாடலிங்கில் ஆர்வம்

26 வயதே ஆகும், மாளவிகா மோகனனுக்கு நடிப்பதை போலவே, மாடலிங்கிலும் ஆர்வம் அதிகம். தனது சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது, ஹாட் போட்டோஷூட்களை நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு, தளபதி ரசிகர்களுக்கும், தனது ரசிகர்களுக்கும் கவர்ச்சி விருந்து கொடுத்து வருகிறார்.

கார்த்திக்கு ஜோடியாக

கார்த்திக்கு ஜோடியாக

மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தனது அடுத்த தமிழ் படத்துக்கு, தயாராகி உள்ளார் மாளவிகா மோகனன், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வரும் நடிகர் கார்த்தி நடிப்பில், பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் மாளவிகா தான் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது.

ஒரு முறை தவறிடுச்சு

ஒரு முறை தவறிடுச்சு

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், விஷால், சமந்தா, அர்ஜுன் நடித்த இரும்புத்திரை படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. சிவகார்த்திகேயன், அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஹீரோ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், தனது அடுத்த படத்தின் மீது அதீத கவனத்தை செலுத்தி வருகிறார் பி.எஸ். மித்ரன்.

வெற்றி நாயகன்

வெற்றி நாயகன்

கைதி, தம்பி என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர் கார்த்தி, சுல்தான் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். மேலும், மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமான காவியப் படமான பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார். இதனால், நிச்சயம், பி.எஸ். மித்ரன், கார்த்தி இணையும் அடுத்த படம் நிச்சயம் மிஸ் ஆகாது என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X