மாஸ்டர் ஆல்பம் புதிய சாதனை.. டிக்டாக்கில் 1500 மில்லியன் பார்வையாளர்கள்!

சென்னை: நடிகர் விஜய்யின் மாஸ்டர் ஆல்பம் புதிய சாதனை படைத்துள்ளது. டிக்டாக்கில் 1500 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்திருப்பதால், இதனை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அனிரூத் மற்றும் விஜயின் முந்தைய கூட்டணியான கத்தி ஆல்பம் மிக பெரிய வெற்றி அடைந்தது. இந்த ஆல்பத்திற்கு நிகரான வெற்றியை தற்போதும் அனிரூத் தருவாரா என்கிற சந்தேகம் விஜய் ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால் சிக்கல் ஏதும் இல்லை என்று தற்போதும் சிக்சர் அடித்திருக்கிறார் இசையமைப்பாளர் அனிரூத் .

Master Album 1500 million views on tiktok

இந்த ஆல்பத்தை பொருத்த வரையில் டாப் சாங் என்றால் அது விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பாடல் தான் இந்த பாடாலின் லிரிக் வீடியோ யூடியூப்பில் 49 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு இருக்கிறது .

டிக்டாக்கை பொருத்த வரையில் இந்த ஆல்பத்தில் குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங் மற்றும் வாத்தி ரைட் ஆகிய 3 பாடல்களை தான் ரசிகர்கள் அதிகம் டிக்டாக் செய்துள்ளனர். இவர்களின் பிடித்தமான பாடல்களாக இந்த ஆல்பத்திலிருந்து இந்த பாடல்கள் தான் கருதபடுகிறது.

Master Album 1500 million views on tiktok

சிறந்த சமூக வலைத்தளமாக தற்போது உருவாகியிருக்கும் டிக்டாக் யூடியூப்பை விட அதிகம் பயன்படுத்தப்படும் தளமாக மாறியிருக்கிறது. இதனால் 1500மில்லியன் பார்வையாளர்கள் டிக்டாக்கில் மாஸ்டர் ஆல்பத்திற்கு கிடைத்திருப்பது உண்மையிலே பெரிய அங்கீகாரம் தான்.

Master Album 1500 million views on tiktok

இந்த வெற்றி செய்தியை சோனி தனது சமூகவலைத்தள பக்கங்களில் ஒரு காணொளியுடன் பகிர்ந்து இருக்கிறது. இந்த காணொளியில் மாஸ்டர் பட பாடல்களை டிக்டாக் செய்து பிரபலமாகியவர்களின் காணொளிகளோடு கோர்வையாக கோர்க்க பட்டு அதை 1500மில்லியன் கொண்டாட்ட வீடியோவாக உருவாக்கியுள்ளனர்.

Master Album 1500 million views on tiktok

இதில் டிக்டாக் பிரபலங்கள் மட்டுமின்றி பல சினிமா பிரபலங்களும் உள்ளடங்கி உள்ளனர். மிக முக்கியமாக நடிகர் ரோபோ சங்கர் மற்றும் அவரது மகள், சாண்டி மாஸ்டர், வேதிகா , நந்திதா மற்றும் முகன் ராவ் ஆகியோரும் தங்களின் அன்பை மாஸ்டர் ஆல்பத்திற்கு டிக்டாக்கில் காட்டியிருந்தனர் இவையனைத்தும் இந்த காணொளியில் சோனி நிறுவனம் சார்பில் இணைக்கபட்டுள்ளது.

Master Album 1500 million views on tiktok

மாஸ்டர் படக்குழுவினரும் இந்த சந்தோஷமான நற்செய்தியை தங்களின் சமூக வலைத்தல பக்கங்களில் பகிர்ந்து இந்த வெற்றியை பரிசளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். இசையமைப்பாளர் அனிரூத் தனது சமூக வலைத்தளத்தில் இந்த செய்தியை பகிர்ந்து லவ் யூ 1.5 பில்லியன் என்று தனது அன்பை தெரிவித்து இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X