பிகிலில் மிஸ் ஆன விஷயம்.. மாஸ்டர் ஆடியோ லாஞ்சில் நடக்கிறது.. எடுத்து வைங்கடா அந்த மைக்க!
சென்னை: மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 15ம் தேதி நடக்கிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலான லீலா பேலஸில் இந்த இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் லைவ் டெலிகாஸ்ட் தவிர்க்கப்பட்ட நிலையில், மாஸ்டர் ஆடியோ லாஞ்ச் லைவ் டெலிகாஸ்ட் செய்யப்படுகிறது.
எடுத்து வைங்கடா அந்த மைக்க
மேயாத மான் மற்றும் ஆடை படங்களின் இயக்குநர் ரத்னகுமார், தனது நண்பர் லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் படத்தில், ரைட்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட் வெளியான உடன், "அந்த மைக்க எடுத்து வைங்கடா" என அசத்தலாக ட்வீட் போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.
என்னலாம் இருக்கு
மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதியுடன் செம ஸ்டைலாக விஜய் இருக்கும் புதிய போஸ்டர் வைரலாகி வருகிறது. ஜேக் டேனியல்ஸ் பாட்டில், பிரிங்ளஸ் சிப்ஸ், ஸ்நிக்கர்ஸ், லைட்டர், ஆஷ் ட்ரே, அமெரிக்க இசை கலைஞர் கென்னி டோர்ஹம் பாடல்கள், ரெக்கார்டு கேசட் என விஜயை சுற்றி பல விஷயங்கள் இருப்பதை ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

பிறந்தநாள் பரிசு
மாநகரம், கைதி படங்களை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தற்போது விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தை இயக்கி உள்ளார். வரும் மார்ச் 14ம் தேதி லோகேஷ் கனகராஜின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், மார்ச் 15ம் தேதி, தனது ரசிகர்களுக்கு மாஸ்டர் ஆடியோ லான்ச் எனும் மிகப்பெரிய பரிசை கொடுக்க உள்ளார்.

லைவ் டெலிகாஸ்ட்
மெர்சல், சர்கார் படங்களின் இசை வெளியீட்டு விழா சன் டிவியில் லைவ் டெலிகாஸ்ட் செய்யப்பட்டது. ஆனால், பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா, நேரலை செய்யப்படவில்லை. இந்நிலையில், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை லைவ் டெலிகாஸ்ட் செய்ய சன் டிவி முன் வந்துள்ளது.
எத்தனை மணிக்கு
மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், அதிகளவிலான ரசிகர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும், ரசிகர்களுக்கான டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப் போவதில்லை என்ற முடிவையும் மாஸ்டர் படக்குழு எடுத்துள்ளதாக தெரிகிறது. சன் டிவியில் மார்ச் 15ம் தேதி மாலை 6.30 மணிக்கு மாஸ்டர் இசை வெளியீட்டு விழா லைவ் டெலிகாஸ்ட் செய்யப்படுகிறது.

என்ன பேசுவார்
மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில், இடம் பெற உள்ள பாடல்களுக்காக ரசிகர்கள் காத்திருப்பதை விட, இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் என்ன பேச போகிறார் என்பதை கேட்கவே அனைவரும் காத்திருக்கின்றனர். வருமான வரித்துறை சோதனை உள்ளிட்ட பல விஷயங்கள் இம்முறை விஜய்யை சுற்றி நடந்துள்ளதால், நிச்சயம் தரமான குட்டி கதை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்டர் பெண்கள்
மகளிர் தினத்தை முன்னிட்டு, மாஸ்டர் படத்தின் செகண்ட் சிங்கிள் குறித்த அப்டேட் இன்று வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மாஸ்டர் படத்தில், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கெளரி கிஷன், வீஜே ரம்யா, செளந்தர்யா என பல பெண்கள் நடித்துள்ள நிலையில், மகளிர் தின ஸ்பெஷல் ஒன்றையும் மாஸ்டர் படக்குழு இன்று வெளியிடப் போகிறது.


Click it and Unblock the Notifications











