என்ன மக்களே ரெடியா.. அண்ணன் வந்தா ஆட்டம்பாம்மு.. இன்று மாலை 6.30 மணிக்கு சன் டிவியில்!
சென்னை: மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில் ரசிகர்கள் இப்போதே கவுன்டவுனை தொடங்கிவிட்டனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் மாஸ்டர். இந்தப் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார்.
விஜய்க்கு ஜோடியாக மலையாள நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

சிங்கிள் ட்ராக்
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் மூன்று சிங்கிள் ட்ராக்குகள் ரிலீஸ் ஆகிவிட்டன. லெட் மி சிங் எ குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங், வாத்தி ரெய்டு

ஆடியோ லாஞ்ச்
இந்நிலையில் இன்று படத்தின் ட்ராக் லிஸ்ட் வெளியாகி இருக்கிறது. மாஸ்டர் ட்ராக் லிஸ்ட் டிவிட்டரில் ட்ரென்ட்டிங்கில் உள்ளது. இன்று மாலை மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலான லீலா பேலஸில் மாலை 6.30 மணிக்கு இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

சன்டிவியில் நேரலை
வழக்கமாக பிரமாண்டமாக நடைபெறும் இசை வெளியீட்டு விழா, இம்முறை எந்த ஆரவாரமும் இல்லாமல் கூட்டம் சேர்க்கப்படாமல் அடக்கமாக நடத்தப்படுகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஆடியோ லாஞ்ச் சத்தமில்லாமல் நடத்தப்படுகிறது. இந்த ஆடியோ லாஞ்ச், இன்று மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.

மக்களே ரெடியா
இதனை முன்னிட்டு என்ன மக்களே ரெடியா என கேட்டு சன் டிவியின் டிவிட்டர் பக்கத்தில் டிவிட்டப்பட்டுள்ளது. மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவை காண ரசிகர்களும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். #MasterAudioLaunch, #BeatOfMaster, #MasterTrackList ஆகிய ஹேஷ்டேக்குகள் டிவிட்டரில் ட்ரென்ட்டாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











