மாஸ்டர் படத்துலையும் விஜய் கைதியா? ஒரு குட்டி கதை கேட்டு சாமியாட தயாரா.. நாளைக்கு இருக்கு சம்பவம்!
Recommended Video
சென்னை: மாஸ்டர் படத்தின் 'ஒரு குட்டி கதை' பாடல் நாளை வெளியாகவுள்ள நிலையில், மாஸ்டர் பீட்டை அனிருத் தற்போது வெளியிட்டு தளபதி ரசிகர்களை வெறியேற்றியுள்ளார்.
மாநகரம், கைதி படங்களை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜை நடிகர் விஜய்யை வைத்து இயக்கும் படம் தான் மாஸ்டர்.
இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்துள்ளார். நாயகியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும், நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இணைந்திருக்கிறது.
கைதி படத்தை தொடர்ந்து மாஸ்டர் படத்திலும் நடிகர் விஜய் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் கைதியாக இருந்திருப்பார் என்ற யூகங்களும் கிளம்பி வருகின்றன.

நாளைக்கு என்ன நாள்
உலகில் உள்ள அனைவருக்கும் நாளைக்கு காதலர் தினம், ஆனால், தளபதி ரசிகர்களுக்கு நாளை மாஸ்டர் சிங்கிள் டே ரிலீஸ் தினம். தளபதி விஜய் வாய்ஸில் ஒரு குட்டி கதையை கேட்க ரசிகர்கள் கடந்த சில தினங்களாகவே மந்திரிச்சு விட்ட கோழி போல திரிந்து வருகின்றனர். அவர்களுக்கு மேலும், அருள் ஏற்றுவது போல அனிருத் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சாமி ஆட தயாரா?
மாஸ்டர் படத்தின் அறிவிப்பு வெளியாகும் போதே, சாமி ஆட தயாரா என அப்டேட் கிங் ரத்னகுமார் ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதற்கான அர்த்தம் அப்போ புரியல, இப்போதான் புரியுது, உடுக்கை எஃபெக்டில் அனிருத் போட்டுள்ள மாஸ்டர் பீட்டை கேட்டு புள்ளிங்க எல்லாம் சாமி ஆடி வருகின்றனர்.
இன்னும் ஒரு நாள்
சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் நடிகர் விஜய்யின் குரலில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘ஒரு குட்டி கதை' பாடலுக்காக இன்னும் ஒரு நாள் காத்திருக்கணுமா.. இப்பவே ரிலீஸ் பண்ணிடுங்களேன் என்ற மைண்ட் செட்டில் தளபதி ரசிகர்கள் துடித்து வருகின்றனர்.
செம மீம்
நீங்க சிங்கிளாகவும், தளபதி ரசிகரகாவும் இருந்து, லைஃப்ல ஃபர்ஸ்ட் டைம் பிப்ரவரி 14க்காக வெயிட் பண்றேன் ஆத்தா என சின்ன கவுண்டர் மீமை போட்டு அட்டகாசம் செய்து வருகின்றனர் தளபதி ரசிகர்கள், நாளைக்கு எல்லோருக்கும் வேலன்டைன்ஸ் டே கிடையாது, மாஸ்டர் சிங்கிள் டே தான் என ஞாபகப்படுத்தி வருகிறது இந்த மீம்.
வேற லெவல்
மாஸ்டர் படத்தின் ஒரு குட்டி கதை பாடலுக்காக அனிருத் போட்டுள்ள மாஸ்டர் பீட், வேற லெவல் வெறித்தனம் என தளபதி ரசிகர்கள், அனிருத்தை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். மேலும், சில ரசிகர்கள், சிறப்பான தரமான சம்பவத்தை செஞ்சிட்டீங்க என்றும், சூப்பர் அண்ணா என்றும் தங்களது அன்பை வெளிக்காட்டி வருகின்றனர்.
சிறுவர் சீர்த்திருத்த பள்ளி
தலைவா படத்தில் வருவது போன்று, குடித்து விட்டு தளபதி பாடும் பாடலாக இது இருக்கும் என்றும், 100 சதவீதம் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் நடிகர் விஜய் இருந்த கதையை மையப்படுத்தி மாஸ்டர் படம் இருக்கும் என்றும் இந்த ரசிகர் தனது கணிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அனிருத்தின் அந்த இசையை பார்த்தாலே அது ஜெயிலில் வழங்கப்படும் சாப்பாட்டு தட்டை வைத்து போட்ட ட்யூன் போலத்தான் இருக்கிறது.


Click it and Unblock the Notifications











