டிஆர்பி ரேட்டிங்...விஸ்வாசத்தை மிஞ்சிய விஜய்யின் மாஸ்டர்

சென்னை : தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களான விஜய், அஜித் ரசிகர்கள் இடையே யார் நம்பர் ஒன் என்பதில் எப்போதும் போட்டி நிலவுகிறது. தியேட்டர் வசூலில் மட்டுமல்ல டிவி ஒளிபரப்பிலும் அவர்களது படங்களின் ரேட்டிங் எப்படி இருக்கும் என்பது குறித்தும் அவர்களது ரசிகர்கள் மோதிக் கொள்வார்கள்.

Recommended Video

VAATHI COMING Sets New Record | Lokesh Kanagaraj, Thalapathy Vijay, Anirudh

தற்போது விஜய், அஜித் நடித்த படங்களின் டிஆர்பி ரேட்டிங் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மற்ற படங்களின் சாதனையை முறியடித்து விஜய் நடித்த மாஸ்டர் படம் முதலிடம் பிடித்துள்ளது.

முதலிடத்தில் இருந்த விஸ்வாசம்

முதலிடத்தில் இருந்த விஸ்வாசம்

டிவி சேனல்களின் டிஆர்பி ரேட்டிங்கில் நீண்ட நாட்களாக அஜித் நடித்த விஸ்வாசம் படம் முதல் இடத்தில் இருந்து வந்தது. விஸ்வாசம் படம் 18143000 பதிவுகளை பெற்றது. நீண்ட நாட்களாக டாப் 3 இடங்களை பிடித்திருந்தது விஸ்வாசம், பிச்சைக்காரன், சர்கார் படங்கள் தான்.

டாப் 3 விஜய் படங்கள்

டாப் 3 விஜய் படங்கள்

டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்த விஜய் படங்கள் பிகில், சர்கார் தான். கடந்த 2 வருடங்களாக டிஆர்பி வரிசையில் முதலிடத்தில் இருந்த விஸ்வாசம் படத்தின் சாதனையை தற்போது மாஸ்டர் படம் முறியடித்துள்ளது.

பல சாதனை படைத்த மாஸ்டர்

பல சாதனை படைத்த மாஸ்டர்

விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகன் நடித்த மாஸ்டர் படம், தியேட்டர் வசூல், டிஜிட்டல் தள வசூல், யூட்யூப்பில் வாத்தி கம்மிங் பாடலுக்கு கிடைத்த பார்வைகள் என பல சாதனைகளை முறியடித்துள்ளன.

டிஆர்பி.,யில் முதலிடம்

டிஆர்பி.,யில் முதலிடம்

சாதனை வரிசையில் தற்போது லேட்டஸ்ட்டாக மாஸ்டர் படம் டிஆர்பி.,யிலும் சாதனை படைத்துள்ளது. இந்த படம் 13755000 பதிவுகளை மாஸ்டர் படம் பெற்றுள்ளது. விஜய் படங்களிலேயே டிஆர்பி.,யில் அதிக பதிவுகளை பெற்றதும் மாஸ்டர் படம் தானாம்.

டாப் டிவி ரேட்டிங் பெற்ற படங்கள்

டாப் டிவி ரேட்டிங் பெற்ற படங்கள்

விஸ்வாசம் - 1,81,43,000

பிச்சைக்காரன் - 1,76,96,000

சர்க்கார் - 1,69,06,000

சீமராஜா - 1,67,66,000

பிகில் - 1,64,73,000

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X