மாஸ்டர் செஃப் பிரபலத்தை கொடுமைப்படுத்திய மனைவி.. விவாகரத்து வழக்கில் தீர்ப்பு யார் பக்கம்?
மும்பை: மாஸ்டர் செஃப் இந்தியா நிகழ்ச்சியின் நடுவர் குணால் கபூர் தனக்கு ஏகப்பட்ட தொல்லைகளை கொடுத்து வருகிறார் என தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியிருப்பது பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
தமிழில் சன் டிவியில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதனை விஜய்சேதுபதி தொகுத்து வழங்கினார். அதே போல உலகம் முழுவதும் மாஸ்டர் செஃப் எனும் சமையல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்தி ரசிகர்களின் ஃபேவரைட் நிகழ்ச்சியான மாஸ்டர் செஃப் இந்தியா நிகழ்ச்சியில் தான் நடுவராக குணால் கபூர் செயல்பட்டு வருகிறார்.
குக்கரி ஷோ: சாதாரண சீரியல்களையே ரசிகர்கள் மணிக் கணக்கில் அச்சச்சோ சோனியா புருஷன் ரமேஷ் உடன் ஓடிப் போயிட்டானா என பார்த்து வருவார்கள். சீரியலை தாண்டி ரசிகர்களை ரியாலிட்டி ஷோக்கள் அதைவிட அதிகமாகவே கவர்ந்து வருகிறது. அடுத்தவர்கள் எப்படி தூங்குறாங்க, பாத்ரூமில் எப்படி பிரஷ் பண்றாங்க என்பதையெல்லாம் காட்டும் பிக் பாஸ் நிகழ்ச்சி உலகம் முழுவதும் பிரபலமாகி வருவதை போல, சமையல் நிகழ்ச்சிகளும் வித விதமாக டிரெண்டாகி வருகிறது. தமிழில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி அடுத்த சீசனை ஆரம்பிக்க உள்ள நிலையில், மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

மாஸ்டர் செஃப் நடுவர்: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செஃப் தாமு, மாதம்பட்டி ரங்கராஜ் போன்றவர்கள் நடுவர்களாக இருந்து வரும் நிலையில், அதைப் போல இந்தியில் ஒளிபரப்பாகி வரும் மாஸ்டர் செஃப் இந்தியா நிகழ்ச்சியில் நடுவராக குணால் கபூர் என்பவர் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று பிரபலமாகி வருகிறார். அவர் தனது மனைவியின் டார்ச்சர் தாங்க முடியவில்லை என விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார்.
மனைவியால் தொல்லை: தனது பெற்றோர்களை அவமானப்படுத்துகிறார். தன்னை அசிங்கப்படுத்துகிறார் என மனைவி மீது விவாகரத்து புகார் கொடுத்திருக்கிறார் குணால் கபூர். அவருக்கு எதிராக கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் ஆனால், அவருடன் தான் சேர்ந்து வாழவே விரும்புதாகவும் மனைவி வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்து வந்த டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2) குணால் கபூருக்கு ஆதரவாக விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்ற நிலையில், 2012ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. பல வருடங்கள் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், திடீரென இருவரும் பிரிந்தது பாலிவுட் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











