லீக்கான மாஸ்டர் கிளைமேக்ஸ் காட்சி.. அதிர்ச்சியில் லோகேஷ் கனகராஜ்.. ஷேர் செய்ய வேண்டாம் என கோரிக்கை
சென்னை: மாஸ்டர் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி என ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.
Recommended Video
சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, கெளரி கிஷன், அர்ஜுன் தாஸ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், பிரேம், வி.ஜே. ரம்யா, ரமேஷ் திலக், செளந்தர்யா, சேத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் உருவாகி இருக்கிறது.

தியேட்டர்கள் திறக்கட்டும்
தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை தியேட்டரில் மாஸாக கொண்டாட விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். கொரோனா ஒரு பக்கம் பெருகிக் கொண்டே போனாலும், தளர்வுகள் அதிகரித்த வண்ணம் இருப்பதால், விரைவில் தியேட்டர்களும் திறக்கப்படும் என்ற நம்பிக்கை எழுந்து வருகிறது.

அரசிடம் கோரிக்கை
ஒவ்வொரு தொழில் துறையினரும் தங்கள் நிறுவனங்களை இயக்க தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து வரும் நிலையில், தியேட்டர் உரிமையாளர்களும், தியேட்டர்களை உரிய பாதுகாப்புடன் இயக்க அனுமதி வழங்குமாறு கோரிக்கைகளையும் வைத்து வருகின்றனர். ஜூலை மாதத்தில் தியேட்டர்கள் திறக்கப்படும் என்கிற தகவல்களும் வெளியாகி வருகின்றன.

லீக்கான பைக் ரேஸ் காட்சி
இந்நிலையில், மாஸ்டர் படத்தின் பைக் ரேஸ் மேக்கிங் வீடியோ ஒன்று லீக்காகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பைக் ரேஸ் காட்சி மாஸ்டர் படத்தில் இருப்பது தானா? அல்லது ரசிகர்கள் உருவாக்கிய வீடியோவா என்ற சந்தேகமும் கிளம்பி இருக்கின்றன. தளபதி ரசிகர்கள் லீக்கான வீடியோவை யாரும் ஷேர் செய்ய வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அஜித் ரசிகர்கள் கிண்டல்
இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருவதே அஜித் ரசிகர்கள் தான். நடிகர் அஜித்தை போலவே விஜய்யும் மாஸ்டர் படத்தில் பைக் ஸ்டன்ட் செய்துள்ளார் என்றும், ஆனால், அவருக்கு பதிலாக டூப் போட்டு அந்த காட்சி எடுத்துள்ளதாகவும் ட்ரோல் செய்து வருகின்றனர். சிலர், இது மாஸ்டர் பட காட்சியே இல்லை என்றும் மறுத்து வருகின்றனர்.

வைரலாகும் நாயகி
பேட்ட படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான மாளவிகா மோகனன், மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மாஸ்டர் படத்தில் மாளவிகா நடித்துள்ள நிலையில், கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் வைரலாக அவ்வப்போது தனது படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு தளபதி ரசிகர்கள் மத்தியில் ‘தலைவி'யாக மாறியுள்ளார்.


Click it and Unblock the Notifications